வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

மார்க்கெட் இழந்த நிலையில் கம்பேக் கொடுத்த 5 நடிகர்கள்.. சொல்லி அடித்து தரமான படத்தை கொடுத்த சிம்பு

என்னதான் நடிகர்களின் படங்கள் தொடர்ந்து வெளி வந்தாலும் ரசிகர்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு பிளாக்பஸ்டர் ஹிட் கொடுப்பது மிக கடினம் தான். அந்த நேரத்தில் சில நடிகர்களின் மார்க்கெட் சரிந்து விடுவது போல் அமையும். அப்பொழுது இவர்களுக்கு கம்பேக் கெடுத்து அவர்களை தூக்கி விடும் விதமாக சில படங்கள் அமைந்திருக்கிறது. அந்த நடிகர்கள் பற்றியும் அவர்கள் கொடுத்த தரமான படத்தையும் பற்றி பார்க்கலாம்.

அஜித்: அஜித் என்னதான் தொடர்ந்து படங்களில் நடித்துக் கொண்டிருந்தாலும் ஒரு பிளாக் பஸ்டர் படங்களாக எதுவும் கொடுக்கவில்லை என்று இவருடைய ரசிகர்கள் மிக நொந்து போயிருந்த நிலையில் அவர்களை திருப்திப்படுத்தும் விதமாக வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவந்த படம் தான் மங்காத்தா. இப்படம் அஜித்திற்கு மிகப்பெரிய திருப்புமுறையாக அமைந்ததோடு மட்டுமில்லாமல் அவர்களுடைய ரசிகர்களையும் வேற லெவலில் திருப்திப்படுத்தியது.

Also read: இரட்டை கதாநாயகர்களாக அஜித் நடித்த 5 படங்கள்.. ஆக்சன் கிங்க்கு இணையாய் நின்ற அஜித்

கமல்: இவருடைய விஸ்வரூபம் படத்திற்கு பிறகு எந்த படங்களும் இவருக்கு வெற்றியை கொடுக்கவில்லை. இனிமேல் இவருடைய சினிமா கேரியர் முடிந்தது என்று இருந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் இவரை தூக்கிவிட்ட இயக்குனர் தான் லோகேஷ். இவரின் இயக்கத்தில் வெளிவந்த விக்ரம் படம் கமலுக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்து அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார். இதிலிருந்து இவருடைய இமேஜ் வேற லெவல்ல மாறிவிட்டது.

சூர்யா: சராசரியான படத்தை கொடுத்து வந்த இவர் இனி சினிமாவின் இவ்வளவு தான் இமேஜ் என்று தீர்மானித்த நிலையில் இது நான் இல்லை இதுக்கு மேலேயும் என்னால் வர முடியும் என்று நிரூபித்துக் காட்டிய படம் தான் சூரரை போற்று. சுதா கொங்காரா இவருக்கு மிகப்பெரிய இமேஜை கொடுத்திருக்கிறார். இப்படம் இவருக்கு சிறந்த நடிகர் என்ற தேசிய விருதை பெற்றுக் கொடுத்தது.

Also read: தனக்கு வந்தா ரத்தம், மத்தவங்களுக்கு வந்த தக்காளி சட்னியா.. கங்குவா படப்பிடிப்பில் சூர்யா செய்யும் அலப்பறை

விஜய்: இவருடைய படங்கள் தொடர்ந்து வந்திருந்தாலும் பெரிய ஹிட் படங்கள் என்று சொல்லும் படியாக அமையாமல் மார்க்கெட் கொஞ்சம் சரிந்த நிலையில் இருந்தது. அப்பொழுது ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் தெறிக்கவிட்டு விஜய்க்கு கம்பேக் கொடுத்த படம் தான் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த துப்பாக்கி. இப்படத்தின் மூலம் எனக்கு எண்டு கார்டே கிடையாது என்று அனைவரையும் அதிர வைத்திருப்பார்.

சிம்பு: இவருடைய விண்ணைத்தாண்டி வருவாயா படத்திற்கு பிறகு இவரின் ரசிகர்கள் இவரிடம் பெரிய எதிர்பார்ப்பை வைத்தார்கள். ஆனால் இப்படத்தின் வெற்றிக்கு பிறகு இவர் நடித்து வந்த அனைத்து படங்களும் தொடர்ந்து தோல்வியை கொடுத்தது. இந்நிலையில் இனிமேல் இவருடைய படம் இப்படித்தான் இருக்கும். அத்துடன் இனி இவர் நடிப்பதற்கு வாய்ப்பே இல்லை என்று நினைத்திருந்த நேரத்தில் வெங்கட் பிரபு இவருக்கு கொடுத்த தரமான கம்பேக் படம் தான் மாநாடு. இப்படம் சிம்புவுக்கு வேற லெவல்ல கொண்டு போய்விட்டது.

Also read: சிம்பு படத்தின் நடிகையை வச்சு செய்யும் ரசிகர்கள்.. இனி அந்த நடிகை எந்த படத்திலும் நடிக்க வாய்ப்பில்லை

Trending News