வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

திரிஷாவுக்கு பொருத்தமான ஜோடியாக நடித்த 5 நடிகர்கள்.. நிஜத்திலும் வளைத்து போட நினைத்த சிம்பு

திரையுலகில் 20 வருடங்களுக்கு மேலாக முன்னணி நடிகையாக இருக்கும் ஒரே நடிகை தற்போது த்ரிஷா மட்டும்தான். இவர் மௌனம் பேசியது என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமானதிலிருந்து இப்பொழுது வரை ஹீரோயின் ஆகவே நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த மாதிரி வாய்ப்பு நடிகைகளுக்கு கிடைப்பது மிகவும் அபூர்வம். அதிலும் இவர் நடித்த முன்னணி ஹீரோகளுக்கு இவர் தான் பெஸ்ட் பேர் என்று சொல்லும் அளவிற்கு பெயர் வாங்கிக் கொண்டிருக்கிறார். அப்படி இவருக்கு ஆன் ஸ்கிரீன் ஜோடி யார் என்று பார்க்கலாம்.

தளபதி விஜய்: முன்னணி நடிகராக இருக்கும் விஜய்யும், ரசிகர்களின் கனவு கண்ணியாக இருக்கும் த்ரிஷாவும் சேர்ந்து ஐந்து படங்களில் நடித்திருக்கிறார்கள். 2004 இல் வெளியான கில்லி திரைப்படத்தின் மூலம் இவர்கள் இருவரும் இணைந்து நடிக்க ஆரம்பித்தார்கள். இவர்களுடைய பேர் ரொம்பவே நன்றாக இருந்தால் தொடர்ந்து திருப்பாச்சி,  ஆதி, குருவி படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. மறுபடியும் இவர்கள் ஒன்று சேர்ந்து நடிப்பார்களா என்று எதிர்பார்த்து நிலையில் 15 வருடங்களுக்கு மேல் இப்பொழுது லியோ படத்தின் மூலம் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார்கள். அவர்களுடைய ஜோடியை பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்து இருக்கிறார்கள்.

Also read: பொன்னியின் செல்வனில் குந்தவை வாங்கிய மொத்த சம்பளம்.. பீல்ட் அவுட் ஆகியும் இவ்வளவு கோடியா?

சிலம்பரசன்: இவருடன் சேர்ந்து 2003இல் அலை என்ற படத்தின் மூலம் ஜோடியாக நடித்தார். அதன் பின் 2010 ஆம் ஆண்டு விண்ணைத்தாண்டி வருவாய் என்ற படத்தின் மூலம் மறுபடியும் இணைந்தார்கள். இந்த படம் இவர்களுக்காகவே எடுத்த படம் போல் அவ்வளவு பெரிய வரவேற்பை ஏற்படுத்தி மிகப் பெரிய வெற்றியை கொடுத்தது. இன்னும் இந்த படத்திற்கான இரண்டாம் பாகம் எப்பொழுது வரும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அத்துடன் இவர்களுடைய பிரண்ட்ஷிப் பார்க்கும்போது ரியல் லைஃப் ஜோடியாக இருப்பது போல் தோன்றும் அளவிற்கு எதார்த்தமாக இருவரும் நடித்திருப்பார்கள்.

அஜித்: அஜித் மற்றும் த்ரிஷா இவர்கள் இணைந்து நான்கு படங்களில் நடித்திருக்கிறார்கள். 2005 ஆம் ஆண்டு ஜி படத்தின் மூலம் இவர்கள் ஜோடியாக நடிக்க ஆரம்பித்தார்கள். இதனைத் தொடர்ந்து கிரீடம், என்னை அறிந்தால், மங்காத்தா போன்ற படங்களில் ஜோடியாக நடித்து அந்த படங்கள் அனைத்தும் வெற்றிப்படமாக இவர்களுக்கு கை கொடுத்தது. இவர்கள் ஜோடியை பார்ப்பதற்கு பெஸ்ட் ஜோடியாக இருக்கும்.

Also read: குந்தவைக்கு ஏன் கல்யாணம் நடக்கல? உண்மையை புட்டு புட்டு வைக்கும் திரிஷாவின் அம்மா

மகேஷ் பாபு: டோலிவுட் நடிகரான மகேஷ் பாபுவுடன் த்ரிஷா 2005 ஆம் ஆண்டு அத்தாடு திரைப்படத்தில் ஜோடியாக நடித்து பலரால் விரும்பப்பட்ட ஜோடியாக இருந்தார்கள். இதனை எடுத்து 2006 ஆம் ஆண்டு சைனிகுடு படத்திலும் ஜோடியாக நடித்தார்கள். இவர்கள் காம்பினேஷன் வந்த இரண்டு படமும் ரசிகர்கள் அதிகமாக ரசித்து பார்த்திருக்கிறார்கள்.

விக்ரம்: விக்ரம் மற்றும் த்ரிஷா இவர்கள் இணைந்து சாமி, பீமா ஒன்று இரண்டுபடங்களில் ஜோடியாக நடித்தார்கள். அதிலும் சாமி படத்தில் இவருக்கு மனைவியாக நடித்ததே பார்க்கும் பொழுது இவருக்கு சரியான ஆளை இவர் தான் என்று சொல்லும் அளவிற்கு இரண்டு பேருமே உண்மையில் கணவன் மனைவி போல் நடித்துக் காட்டி இருப்பார்கள். இதனை அடுத்து தற்பொழுது பொன்னியின் செல்வன் படத்திலும் இருவர்கள் நடித்திருக்கிறார்கள்.

Also read: இந்த வருடம் வைரலான 3 ஹீரோக்களின் போட்டோஸ்.. ரஜினி, அஜித்தை ஓரம் கட்டிய விஜய்

Trending News