சாதாரணமாக சினிமாவில் ஒரு திறமை வைத்து ஜொலித்தவர்கள் பல இருந்தாலும் பன்முகத் தன்மை கொண்டு தனது திறமையை மேம்படுத்திக் கொண்டுள்ளனர் சிலர். அந்த வகையில் இயக்குனர், ஹீரோ, வில்லன் என மூன்று பரிமாணங்களைக் கொண்ட 5 பிரபலங்கள் யார் என்பதை தற்போது பார்க்கலாம்.
நாசர்: திரைக்கதை, வசனம், பாடல் ஆசிரியர், பாடகர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்டவர். ஆரம்பத்தில் நாசர் ஹீரோவாக பல படங்களில் நடித்துள்ளார். இதைத்தொடர்ந்து 90களில் இருந்து தற்போது வரை வில்லன், குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். மேலும் நாசர் இயக்குனராக அவதாரம், தேவதை, மாயன் போன்ற படங்களையும் இயக்கியுள்ளார்.
Also Read : நாக்கை புடுங்குற மாதிரி கேள்வி கேட்ட இயக்குனர் சிகரம்.. நேரத்தின் முக்கியத்துவத்தை அறிந்த நாசர்.!
ராகவா லாரன்ஸ்: நடன இயக்குனராக சினிமாவில் நுழைந்தார். இதைத்தொடர்ந்து அற்புதம், முனி, காஞ்சனா போன்ற படங்களில் ஹீரோவாக நடித்தார். மேலும் பிரசாத் நடிப்பில் வெளியான பார்த்தேன் ரசித்தேன் என்ற படத்தில் வில்லனாக நடித்திருந்தார். லாரன்ஸ் இயக்குனராக முனி, காஞ்சனா, லட்சுமி போன்ற படங்களை இயக்கியுள்ளார்.
எஸ் ஜே சூர்யா: அஜித்தின் வாலி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதைத்தொடர்ந்து நியூ படத்தை இயக்கி அதில் கதாநாயகனாகவும் நடித்திருந்தார். இப்போது மெர்சல், மாநாடு, டான் போன்ற படங்களில் வில்லனாகவும் நடித்து அசத்தி வருகிறார். இப்படி எஸ் ஜே சூர்யா ஆல் ரவுண்டராக கலக்கி வருகிறார். மேலும் இப்போது வில்லன் நடிகர் என்றாலே இயக்குனர்களின் முதல் சாய்ஸ் எஸ் ஜே சூர்யா தான்.
Also Read : உருவத்திலும், நடிப்பிலும் ஒற்றுமையாக இருக்கும் நடிகர்கள்.. எஸ் ஜே சூர்யாவை ஜெராக்ஸ் எடுத்த வில்லன் நடிகர்
பிரகாஷ்ராஜ்: இயக்குனர் இமயம் பாலச்சந்தரால் சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்டார். டூயட் படத்தின் மூலம் ஹீரோவான பிரகாஷ் ராஜ் அதன் பிறகு வில்லன் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்தார். அதிலும் விஜயின் கில்லி படம் இவருக்கு மிகப்பெரிய பெயரை வாங்கி கொடுத்தது. மேலும் தோனி, உன் சமையல் அறையில் போன்ற சில படங்களை பிரகாஷ்ராஜ் இயக்கி உள்ளார்.
அர்ஜுன்: ஒரு காலகட்டத்தில் மாஸ் ஹீரோவாக வலம் வந்தார் என்பது நாம் அனைவரும் அறிந்தது தான். ஜென்டில்மேன், முதல்வன் போன்ற படங்கள் இவருக்கு மிகவும் திருப்புமுனையாக அமைந்தது. இப்போது இரும்புத்திரை போன்ற சில படங்களில் நெகட்டிவ் கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். மேலும் தளபதி 67 படத்திலும் அர்ஜுன் வில்லனாக நடிப்பதாக கூறப்படுகிறது. அர்ஜுன் வேதம், தவம், செம்ம திமிரு போன்ற படங்களையும் இயக்கி உள்ளார்.
Also Read : மகளுடன் நடிக்க மறுத்ததால் பிரஸ் மீட் வைத்து அவமானப்படுத்திய அர்ஜுன்.. டென்ஷனாகி பதிலடி கொடுத்து நடிகர்