திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

கமல் தேடி போய் வாய்ப்பு கொடுக்கும் 5 நடிகைகள்.. ராசியான நடிகை என பெயர் வாங்கிய ஆண்ட்ரியா

கோலிவுட்டில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வரக்கூடியவர் தான் நடிகர் கமலஹாசன். அதிலும் இவர் சினிமாவில் தன்னுடன் நடிக்கும் நடிகர், நடிகைகளில் யாரேனும் ஒருவரை பிடித்து விட்டால் அவர்களுக்கு தனது அடுத்தடுத்த படங்களில் நடிக்கும் வாய்ப்பை எளிதாக கொடுத்து விடுகிறார். அப்படியாக உலக நாயகனே தேடி போய் வாய்ப்பை கொடுக்கும் ஐந்து நடிகைகளை பற்றி இங்கு பார்க்கலாம்.

ரம்யா கிருஷ்ணன்: தமிழ் சினிமாவில் வெள்ளை மனசு எனும் திரைப்படத்தின் மூலம் தனது திரை பயணத்தை தொடங்கியவர் தான் நடிகை ரம்யா கிருஷ்ணன். மேலும் 30 ஆண்டுகளாக திரைத்துறையில் தனது வெற்றிப் பயணத்தில் இருக்கும் இவர் கிட்டத்தட்ட 200 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். அதிலும் கமலஹாசன் உடன் பேர் சொல்லும் பிள்ளை, பஞ்சதந்திரம் போன்ற படங்களில் ரம்யா கிருஷ்ணன் இணைந்து நடித்திருந்தார். மேலும் இவரின் நடிப்பை பார்த்து உலக நாயகனே பாராட்டி பேசி இருக்கிறார்.

Also Read: கமல் வித்தியாசமான நடிப்பை காட்டிய ஐந்து படங்கள்.. இன்றுவரை மறக்க முடியாத சப்பாணி

அமலா: தமிழ் சினிமாவில் தனது எதார்த்தமான நடிப்பின் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் தான் நடிகை அமலா. அதிலும் ரஜினிகாந்த், கமலஹாசன் போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.  மேலும் இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் போன்ற பிற மொழி திரைப்படங்களிலும் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அதிலும் கமலஹாசன் உடன் சத்யா, வெற்றி விழா போன்ற படங்களில் இணைந்து நடித்திருக்கிறார்.

ஊர்வசி: 1979 ஆம் ஆண்டு வெளியான கதிர் மண்டபம் என்னும் மலையாள திரைப்படத்தின் மூலம் தனது திரைப்பயணத்தை தொடங்கியவர் தான் நடிகை ஊர்வசி. அதனைத் தொடர்ந்து தமிழில் பாக்கியராஜ் நடிப்பில் வெளிவந்த முந்தானை முடிச்சு என்னும் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் பெற்றார். இதனைத் தொடர்ந்து  இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் 702 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். அதிலும் கமலுடன் இணைந்து மைக்கேல் மதன காமராஜன், அந்த ஒரு நிமிடம் போன்ற படங்களில் நடித்து ஹிட் கொடுத்துள்ளார். மேலும் ஊர்வசியின் நடிப்பானது கமலையே ஓவர் டேக் செய்யும் அளவிற்கு இருப்பதால் அவரே சில சமயங்களில் பாராட்டியிருக்கிறார்.

Also Read: பாக்யராஜ் பதற பதற அடித்த ஊர்வசி.. குழந்தைத்தனமான நடிப்பில் வெளிவந்த 5 படங்கள்

ஆண்ட்ரியா: சினிமாவில் பின்னணி பாடகியாக தனது திரை பயணத்தை தொடங்கியவர் தான் நடிகை ஆண்ட்ரியா. அதனைத் தொடர்ந்து பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன் ஆகிய திரைப்படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பரிச்சயமான நடிகையாக வலம் வந்தார். அதிலும் உலகநாயகனுடன் விஸ்வரூபம், உத்தம வில்லன் போன்ற படங்களில் ஜோடி சேர்ந்து நடித்திருக்கிறார்.  அதிலும் ஆண்ட்ரியா நடிக்கும் கதாபாத்திரங்கள் காலங்கள் கடந்து பேசப்படும் அளவிற்கு இருப்பதால் கமலஹாசனுக்கு ராசியான நடிகையாகவே இருந்து வருகிறார். 

சிம்ரன்: தமிழ் சினிமாவில் தனது நடனத்தின் மூலம் ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகி ஆக வலம் வருபவர் தான் நடிகை சிம்ரன். அதிலும் தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்து வந்த இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு போன்ற பிற மொழி திரைப்படங்களிலும் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அதிலும் கமலஹாசன் உடன் பம்மல் கே சம்பந்தம், பஞ்சதந்திரம் போன்ற படங்களில் இணைந்து நடித்துள்ளார். மேலும் சிம்ரனின் நடிப்பு மற்றும் நடனத்தை பார்த்து உலக நாயகனே வியந்து இருக்கிறார்.

Also Read: நடிப்பில் ஆழமாய் பதிந்த ஆண்ட்ரியாவின் 5 படங்கள்.. இப்பவும் ராஜன் பொண்டாட்டிக்கு குறையாத மாஸ்

Trending News