வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024

செட்டாகாத வில்லி கேரக்டரில் மொக்கை வாங்கிய 5 நடிகைகள்.. சிரிப்பு மூட்டிய சிம்ரன்

Villi Actress: சினிமாவில் டாப் நடிகைகளாக இருந்த 5 நடிகைகள் கொஞ்சம் கூட தங்களுக்கு செட் ஆகாத நெகட்டிவ் கேரக்டரில் ஏற்று நடித்திருக்கின்றனர். அதிலும் சிம்ரன் வில்லியாக நடித்து சிரிப்பு காட்டி விட்டார்.

மும்தாஜ்: ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான ராஜாதி ராஜா படத்தில் சைலஜா என்ற ரவுடி கேரக்டரில் மும்தாஜ் நடித்தார். இவர் ஒரு அமைச்சராக அந்த படத்தில் நடித்தார். அதிலும் வாயில் சுருட்டு பிடித்துக்கொண்டு ஒரு வில்லியாக தன்னை காட்ட நினைத்தார். ஆனால் அவர் அந்த வில்லத்தனத்திற்கு செட் ஆகல. அவர் நடிப்பு அப்படியே அப்பட்டமாக தெரிந்தது.

ஜோதிகா: கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சரத்குமார், ஆண்ட்ரியா நடிப்பில் வெளியான பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் ஜோதிகா வில்லியாக ‘கீதா’ என்ற கேரக்டரில் நடித்திருந்தார். எத்தனையோ படத்தில் ஜோ-வை ரொமான்டிக் ஹீரோயின் ஆக பார்த்திருப்போம். ஆனால் இந்த படத்தில் சதிகார வேலை செய்து பணம் பறிக்கக் கூடிய நெகட்டிவ் கேரக்டரின் அவரை பார்க்கவே முடியவில்லை. இந்த கேரக்டர் அவருக்கு செட் ஆகல. இருப்பினும் ஜோதிகாவின் இந்த முயற்சி பாராட்டுக்குரியது.

திரிஷா: தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்த கொடி படத்தில் திரிஷா நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதிலும் அரசியல்வாதியாக திரிஷா செம போல்ட் ஆக இதில் நடித்திருந்தாலும், கடைசியில் தன்னுடைய காதலனை கொலை செய்யும் அளவுக்கு வில்லியாக மாறினார். திரிஷா நடிக்கும் படத்தில் எல்லாம் அவருடைய இயல்பான நடிப்பை பார்க்க முடியும். ஆனால் இந்த படத்தில் மெனக்கெட்டு நடிப்பது அப்பட்டமாக தெரிந்தது.

சமந்தா: விக்ரம் ஹீரோவாக நடித்த ’10 எண்றதுக்குள்ள’ என்ற படத்தில் சமந்தா இரட்டை வேடத்தில் நடித்தார். இதில் ஒரு கேரக்டர் அப்பாவி பெண் போன்றும், இன்னொரு கேரக்டரில் கொடூர வில்லியாக சமந்தா நடித்திருந்தார். அப்பாவியாக நடித்த சமந்தாவை ரசிக்க முடிந்தது, ஆனால் கொடூரமான கொள்ளைக் கூட்டத் தலைவியாக சமந்தா நடித்த கேரக்டர் சுத்தமாகவே செட்டாகல. அதிலும் அவர் ஜெயிலிலிருந்து வெளிவருவதற்காக சொந்த பாட்டியையே கொலை செய்யும் அளவுக்கு கொடூரமாக அவரைக் காட்டினர்.

சிம்ரன்: சிவகார்த்திகேயன்- சூரி ஜோடி கைகோர்த்து ஜாலியாக கொடுத்த படம் தான் சீமராஜா. இந்த படத்திற்கு எதிர்பார்த்த அளவு வசூல் கிடைக்கவில்லை. இதில் வில்லியாக சிம்ரன் என்ட்ரி கொடுத்தார். ஆனால் இவரை வில்லியாக சுத்தமாகவே பார்க்க முடியவில்லை. இவர் 90களில் இடுப்பழகியாக இளசுகளை கவர்ந்தவர். அப்படிப்பட்டவர் சீமராஜா படத்தில் காளீஸ்வரி கேரக்டரில் சிவகார்த்திகேயனுக்கு எதிராக செய்யும் சதி செயல் சுத்தமாகவே எடுபடல. அதிலும் மார்க்கெட்டில் பஜாரி மாதிரி லோக்கல் ஆக பேசி ரவுடித்தனம் பண்ணும் சிம்ரனை பார்த்ததும் குபீர்னு சிரிப்பு தான் வந்துச்சு.

- Advertisement -spot_img

Trending News