வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

சிம்புவை நம்பி நடுத்தெருவுக்கு வந்த 5 பிரபலங்கள்.. நயன்தாராவால் கோர்ட் வரை போன சம்பவம்

Simbu – Nayanthara: படிச்சவன் பாட்டை கெடுத்தான், எழுதுனவன் ஏட்டை கெடுத்தான் என்ற பழமொழி சிம்புவுக்கு தான் சரியாக இருக்கும். இப்போது இருக்கும் முன்னணி ஹீரோக்களுக்கு இல்லாத அனுபவம் சிம்புவுக்கு சினிமாவில் அதிகமாகவே இருக்கிறது. இருந்தாலும் அவர் மொத்த பெயரையும் இழந்தது அவருடைய வேதாள குணத்தினால் தான். சிம்புவை நம்பி வாழ்க்கையே நொந்து போன ஐந்து தயாரிப்பாளர்களை பற்றி பார்க்கலாம்.

பி.எல்.தேனப்பன்: சிம்பு கதை எழுதி, இயக்கிய படம் தான் வல்லவன். இந்த படத்தை பி.எல். தேனப்பன் தயாரித்து இருந்தார். ஏற்கனவே படத்தை இயக்கி முடித்து ரிலீஸ் செய்ய சிம்பு கிட்டத்தட்ட மூன்று வருடம் இழுத்தடித்தார். இது போதாது என்று நயன்தாராவுடன் லிப் லாக் காட்சி வரும் புகைப்படத்தை போஸ்டராக அடித்து ஒட்டி, அது கோர்ட் கேசு வரை சென்று நீதிபதி எச்சரிக்கை கொடுக்கும் அளவுக்கு சந்தி சிரித்தது.

Also Read:என் முகம் கொண்ட என் உயிரே, என் குணம் கொண்ட என் உலகே.. டிவின்ஸ் பேபி போட்டோக்களை பதிவிட்ட விக்கி

ஜி.டி. நந்தகுமார்: வல்லவன், மன்மதன் படங்களின் வரிசையில் சிம்பு கதை எழுதிய படம் தான் கெட்டவன். இந்த படத்தை இயக்குனர் நந்தகுமார். படம் எப்படி இழுத்து மூடப்பட்டதோ, அப்படித்தான் இவரின் பெயரும் வெளியில் வராமலேயே போய்விட்டது. யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்கள் வெளியாகி எதிர்பார்ப்பை கிளப்பிய நிலையில், படம் வெளிவரவில்லை.

நெல்சன் திலீப்குமார்: கோலமாவு கோகிலா படத்திற்கு முன்பே நெல்சன் திலிப் குமார் சிம்புவை வைத்து இயக்கிய படம் தான் வேட்டை மன்னன். இந்த படம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. வேட்டை மன்னன் படப்பிடிப்பின் போது தான் மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாக நெல்சன் சமீபத்திய பேட்டி ஒன்றில் சொல்லி இருந்தார். அந்த அளவுக்கு சிம்புவை வைத்து படம் பண்ணி நொந்து போய்விட்டார்.

Also Read:காசு வாரி கொடுத்தா ஓகே, ஜெயம் ரவின்னா கசக்குதா.. தூக்கிவிட்டவரை நன்றி மறந்த நயன்தாரா

மைக்கேல் ராயப்பன்: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் , மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் சிம்பு நடித்த படம் தான் அன்பானவன் அசராதவன் அடங்காதவன். இந்த படத்தின் படப்பிடிப்புக்கு சரியாக ஒத்துழைக்காமல், சிம்பு இவர்களை ரொம்பவே அலைக்கழிய வைத்து விட்டார். தன் இஷ்டத்திற்கு கதையை மாற்றி, வீம்பு பிடித்து இயக்குனர் ஆதிக்கின் சினிமா வாழ்க்கையை மொத்தமாக சோலி முடிக்க பார்த்தார்.

ஐசரி கணேஷ்: சிம்புவின் இரண்டாவது இன்னிங்ஸில் அவரை கரை தேற்றியவரே தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தான். அப்படி இருக்கும்போது அவருக்கே அல்வா கொடுத்தவர் தான் STR . கொரோனா குமார் என்ற படத்தில் நடிப்பதற்கு அட்வான்ஸ் வாங்கிக் கொண்டு, வழக்கம் போல டிமிக்கி கொடுத்து விட்டார்.

Also Read:என் படம் பாக்க குழந்தைகளோடு வராதீங்க! ஏ சர்டிபிகேட் வாங்கிட்டு சப்ப கட்டு கட்டும் ஜெயம் ரவி

Trending News