திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

சினிமாவுக்கு முன் வேறு தொழில் பார்த்த 5 பிரபலங்கள்.. சூப்பர் ஸ்டார் முதல் லேடி சூப்பர் ஸ்டார் வரை

Rajinikanth – Nayanthara : சினிமாவில் நடிகராக வேண்டும் என்ற கனவுடன் பலர் முயற்சி செய்து வருகிறார்கள். ஆனால் வெவ்வேறு தொழில் செய்த பிரபலங்களுக்கு அதிர்ஷ்டவசமாக சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. அதுவும் அவர்கள் நினைத்து கூட பார்க்க முடியாத அளவுக்கு எட்ட முடியாத உயரத்திற்கு சென்றிருக்கின்றனர். அவ்வாறு உள்ள ஐந்து பிரபலங்களை பார்க்கலாம்.

ரஜினிகாந்த் : பலருக்கும் ரஜினியின் ஆரம்பம் எது என்பது தெரிந்த ஒன்றுதான். அதாவது பஸ் கண்டக்டராக தான் ரஜினியின் வாழ்க்கை ஆரம்பித்துள்ளது. அப்போதே அவரது நடை மற்றும் ஸ்டைல் ஆகியவை வித்தியாசமான தோரணையில் இருந்துள்ளது. அதன் பிறகு பாலச்சந்தரால் சினிமாவில் அறிமுகமாகி இப்போது சூப்பர் ஸ்டார் என்ற இடத்தில் இருக்கிறார்.

நயன்தாரா : கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட நயன்தாரா ஆரம்பத்தில் அங்கு உள்ள சேனலில் தொகுப்பாளினியாக இருந்துள்ளார். இதை எடுத்து மாடலாகவும் இருந்த நயன்தாரா மலையாளத்தில் மனசினக்கரே என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இதை அடுத்து தமிழ் சினிமாவில் வாய்ப்பு கிடைக்க லேடி சூப்பர் ஸ்டார் என்ற இடத்திற்கு உயர்ந்து உள்ளார்.

சிவகார்த்திகேயன் : தமிழ் சினிமாவின் டாப் 10 நடிகர்களின் ஒருவராக இருக்கும் சிவகார்த்திகேயன் தனது சினிமா கேரியரை ஆரம்பித்தது தொலைக்காட்சியில் தான். கலக்கப்போவது யாரு என்ற காமெடி நிகழ்ச்சியில் பங்கு பெற்று அதன் பின்பு தொகுப்பாளராக பணிபுரிந்தார். இதைத்தொடர்ந்து மெரினா படத்தின் மூலம் வெள்ளித்திரையில் நுழைந்தார்.

Also Read : நேத்து வந்த பையன் கிட்ட தோத்துப்போன ரஜினி.. வாழ்க்கை கொடுத்த அப்பாவை வச்சு செஞ்ச மகள்

பிரகாஷ் ராஜ் : பன்முகத்தன்மை கொண்ட பிரகாஷ்ராஜ் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதற்கு ஏற்றார் போல் கனகச்சிதமாக நடிக்க கூடியவர். சினிமாவுக்கு வருவதற்கு முன் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் சின்னத்திரை தொடர்களில் நடித்திருந்தார்.

கார்த்தி : சினிமா குடும்பத்தில் இருந்து வந்த கார்த்தி வெளிநாட்டில் பட்டப்படிப்பை முடித்துவிட்டு உதவி இயக்குனராக பணியாற்றி வந்தார். ஆனால் அமீர் இயக்கத்தில் உருவான பருத்திவீரன் படத்தின் மூலம் அவரை நடிகராக பார்த்தது தமிழ் சினிமா. இதனால் தொடர்ந்து கார்த்தி நடிப்பில் தான் கவனம் செலுத்தி வருகிறார்.

சிவா : காமெடி படங்களில் ஹீரோவாக நடித்து கலக்கி வருபவர் தான் சிவா. இப்போதும் சில படங்களில் ஹீரோவாக நடித்து வரும் நிலையில் மிர்ச்சி எஃப்எம்மில் தான் ரேடியோ ஜாக்கியாக தனது பயணத்தை சிவா தொடங்கினார். அதன் பிறகு சென்னை 600028 படத்தில் நடித்து மிகவும் ரசிகர்களிடம் பிரபலமானார்.

ஆர்ஜே பாலாஜி : ரேடியோ ஜாக்கியாக தனது கேரியரை ஆரம்பித்த ஆர்ஜே பாலாஜி அதன் பிறகு காமெடி கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். அதன்பின்பு எல்கேஜி, மூக்குத்தி அம்மன், வீட்டுல விசேஷம் என ஹிட் படங்களை கொடுத்து வந்தார். சமீபத்தில் அவரது நடிப்பில் சிங்கப்பூர் சலூன் படம் வெளியாகி இருந்தது.

Also Read : உயிர் உலகத்துடன் நயன்தாரா கொண்டாடிய காதலர் தினம்.. வைரல் புகைப்படங்கள்

Trending News