வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

லோகேஷ் செதுக்கிய 5 கதாபாத்திரங்கள்.. மாஸ் காட்டிய விஜய் சேதுபதியின் ரெண்டு கேரக்டர்

Director Lokesh: ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைக்கும் அளவிற்கு தரமான படங்களை இயக்கிக் கொண்டு வருகிறார் லோகேஷ். மாநகரம் படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதன் பிறகு நடிகர் கார்த்தியை வைத்து கைதி என்ற படத்தை எடுத்ததன் மூலம் அனைவரது கவனத்தையும் பெற்றுவிட்டார். இதனைத் தொடர்ந்து விஜய்க்கு மாஸ்டர் மற்றும் லியோ படத்தையும் கொடுத்திருக்கிறார்.

இதற்கிடையில் கமல் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த விக்ரம் படத்தை மிகப் பிரம்மாண்டமாக எடுத்து பெரிய அளவில் உயர்ந்து விட்டார். இதனால் இவர் மட்டும் இல்லாமல் அந்த படத்தில் நடித்த அனைவருக்கும் நல்ல கதாபாத்திரமாக அமைந்தது. பொதுவாக ஒரு படத்தில் நிறைய நடிகர்களை கொண்டு வந்தால் அவர்களுடைய பங்களிப்பு மிகவும் குறைவாகத்தான் இருக்கும்.

Also read: 4000 டான்ஸர், புகை பிடித்தல், மது என மொத்த சீக்ரெட்டையும் உடைத்த மன்சூர் அலிகான்.. தலை முடியை பிச்சிக்கும் லோகேஷ்

அதே நேரத்தில் பெரிய அளவில் ரசிகர்களிடம் பெயர் வாங்குவதும் கம்மியாகும். ஆனால் இதற்கு விதிவிலக்காக விக்ரம் படத்தில் நடித்த அனைத்து கதாபாத்திரங்களும் மக்கள் மனதில் என்றைக்கும் நிலத்திற்கும் படி அமைந்துவிட்டது. முக்கியமாக கிட்டத்தட்ட 20 வருட காலமாக சினிமாவில் ஹீரோவாக பயணித்து வரும் சூர்யாவை ஒரு அஞ்சு நிமிஷ கேபில் வில்லனாக காட்டி எங்கு திரும்பினாலும் ரோலக்ஸ் என்று சொல்லும்படி வைத்துவிட்டார்.

அதே மாதிரி விஜய் சேதுபதிக்கு வில்லனாக ரெண்டு வாய்ப்பு கொடுத்து செம மாஸாக காட்டி விட்டார். அதில் விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் படத்தில் பவானி என்ற கேரக்டரை கொடுத்து கச்சிதமாக நடிக்க வைத்து விட்டார். அத்துடன் விக்ரம் படத்தில் சந்தானம் என்ற கேரக்டரை கொடுத்து, இவரை தவிர வேறு யாரு நடித்தாலும் செட் ஆகியிருக்காது, என்று சொல்லும் அளவிற்கு தரமாக காட்டிவிட்டார்.

Also read: 69 ஆவது தேசிய விருதுக்கு தேர்வான படங்கள்.. விஜய் சேதுபதி, மாதவனுக்கு கிடைத்த கெளரவம்

அடுத்ததாக சாதாரண ஒரு கேரக்டர் என்று எதிர்பார்த்து வந்த நேரத்தில் திடீரென்று ஏஜென்ட் டீனாவாக மாறி எதிர்களை பரந்து பறந்து தொம்சம் செய்யும் காட்சியில் அனைவரிடமும் கைதட்டுகளை பெற்று விட்டார். அதே மாதிரி கார்த்தி நடித்த படங்கள் வித்தியாசமாக இருந்தாலும் கைதி டில்லி தான் பெஸ்ட் என்று சொல்லும் அளவிற்கு இவருடைய கதாபாத்திரத்தை மெருகேற்றி விட்டார்.

இப்படி லோகேஷ் சில கதாபாத்திரங்களை அவருடைய படங்களில் காட்டி அவர்களுக்கு சினிமாவில் மிகப்பெரிய இமேஜை உருவாக்கி கொடுத்திருக்கிறார். அந்த வகையில் தற்போது விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ படத்திலும் பல முக்கிய பிரபலங்கள் நடித்து வருகிறார்கள். அவர்களுடைய கதாபாத்திரங்களும் எந்த மாதிரியாக இருக்கப் போகிறது என்று பார்ப்பதற்கு ரொம்ப ஆவலாக இருக்கிறது.

Also read: விஜய்யின் அரசியலுக்கு புதிதாக கிளம்பிய பூகம்பம்.. ஒட்டுமொத்தமாக முற்றுப்புள்ளி வைக்க நினைக்கும் தளபதி

Trending News