வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

நம்பிக்கையினால் டாப் ஹீரோக்களின் பட வாய்ப்பை பெற்ற 5 இயக்குனர்கள்.. தளபதி எடுத்திருக்கும் மிகப்பெரிய ரிஸ்க்

Tamil Directors: ஒரு இயக்குனர் எவ்வளவு ஹிட் படங்கள் கொடுத்திருந்தாலும் அவருடைய முந்தைய படம் பிளாப் ஆகி இருந்தாலும் அல்லது ஏதாவது ஒரு வகையில் சொதப்பி இருந்தாலும் அவர்களுக்கு மீண்டும் பட வாய்ப்பு கிடைப்பது என்பது குதிரைக்கொம்பாக மாறிவிடும். அப்படி இருக்கும் பட்சத்தில் இந்த ஐந்து இயக்குனர்களின் மீது நம்பிக்கை வைத்து முன்னணி ஹீரோக்கள் பட வாய்ப்புகளை கொடுத்திருக்கிறார்கள்.

சிறுத்தை சிவா : குடும்ப செண்டிமெண்ட் படங்களை இயக்கி தமிழ் சினிமா ரசிகர்களிடையே பரீட்சியமான இயக்குனர் தான் சிறுத்தை சிவா. இவர் இறுதியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து இயக்கிய அண்ணாத்தே திரைப்படம் மிகப்பெரிய தோல்வி அடைந்தது. இனி சிறுத்தை சிவாவின் கேரியர் அவ்வளவுதான் என நினைத்துக் கொண்டிருந்தபோது, நடிகர் சூர்யா அவருக்கு கங்குவா திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பை கொடுத்திருக்கிறார்.

Also Read:நாளை அடுத்த சம்பவத்தை செய்யப்போகும் விஜய்.. அதிரடியான அறிவிப்பை வெளியிட்ட புஸ்ஸி ஆனந்த்

மகிழ் திருமேனி: வித்தியாசமான திரை கதைகளின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் இடையே அடையாளம் பெற்ற இயக்குனர் தான் மகிழ்த்திருமேனி. இவருக்கு கடைசி படம் கழக தலைவர் பயங்கரமாக சொதப்பியது. இருந்தாலும் பல இயக்குனர்கள் போட்டி போட்டுக் கொண்டிருந்த நிலையில் நடிகர் அஜித்குமார் தன்னுடைய 62 ஆவது படத்தை இயக்கும் வாய்ப்பை இவருக்கு கொடுத்திருக்கிறார்.

வெங்கட் பிரபு : சினிமாவில் வளர்ந்து வரும் இளம் ஹீரோக்களை வைத்து ஜாலியாக படம் எடுத்து வெற்றி பெற்றவர் தான் வெங்கட் பிரபு. நடிகர் சிம்புவுக்கு இவர் கொடுத்த மாநாடு திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது. ஆனால் அதனை தொடர்ந்து இவர் இயக்கிய மன்மத லீலை மற்றும் கஸ்டடி போன்ற திரைப்படங்கள் மொத்தமாக மண்ணை கவ்வியது. இப்படி தொடர் தோல்விகளை அவர் கொடுத்திருந்தாலும் தளபதி விஜய் தன்னுடைய 68 ஆவது படத்தை இயக்கும் வாய்ப்பை இவருக்கு கொடுத்திருக்கிறார்.

Also Read:தளபதி 70 படத்தை ஷங்கர் இயக்குகிறாரா? வாய்ப்பில்லை ராஜா

அருண் மாதேஸ்வரன்: 2021ல் ராக்கி என்னும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர்தான் அருண் மாதேஸ்வரன். இவர் இயக்குனர் செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் வைத்து இயக்கிய சாணிக் காயிதம் திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்றாலும் ஒரு சில காட்சிகளுக்காக மக்களிடையே வெறுப்பையும் சம்பாதித்தது. அப்படி இருக்கும் பட்சத்தில் நடிகர் தனுஷ் தன்னுடைய கேப்டன் மில்லர் திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பை அவருக்கு கொடுத்து இருக்கிறார்.

நெல்சன்: கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் திரைப்படங்களின் மூலம் பிளாக் காமெடி கான்செப்டை மீண்டும் தமிழ் சினிமாவிற்குள் கொண்டு வந்து வெற்றி பெற்றவர் தான் இயக்குனர் நெல்சன் திலீப் குமார். இவருக்கு மூன்றாவது படமே தளபதி விஜய் வைத்து இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. படம் கலவையான விமர்சனங்களே பெற்றது. இருந்தபோதிலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நெல்சனுக்கு ஜெயிலர் படத்தை இயக்கும் வாய்ப்பை கொடுத்திருக்கிறார்.

Also Read:வாரிசை விட 5 மடங்கு வியாபாரம்.. வியக்க வைக்கும் லியோ ஓவர்சீஸ் விவரம்

Trending News