வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

லோகேஷ் கனகராஜ் இயக்கி, வசூலில் தெறிக்கவிட்ட 5 படங்கள்.. கொஞ்ச நாளில் 500 கோடியை தொட்டுப் பார்த்த மனுஷன்

Director Lokesh Kanagaraj: விரல் விட்டு எண்ணும் அளவிற்கு படங்களை இயக்கியிருந்தாலும், வசூலில் பட்டைய கிளப்பும் படங்களை படைத்து வரும் இயக்குனர் தான் லோகேஷ் கனகராஜ். இவரின் அசுர வளர்ச்சிக்கு எடுத்துக்காட்டாய் இருக்கும் 5 படங்களை பற்றி இத்தொகுப்பில் காணலாம்.

தற்போது இவர் விஜய் நடிப்பில் மேற்கொள்ளும் லியோ படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ள நிலையில், வரும் தீபாவளிக்கு படம் ரிலீஸ் ஆகும் என கூறப்படுகிறது. குறுகிய காலத்தில் இயக்கத்தை முடித்து விடும் தன்மை கொண்ட லோகேஷ் இப்படத்திற்கு சுமார் 5 மாதங்களாய் படப்பிடிப்பை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

Also Read: ஜெயிலர் வசூலை விஜய்யால் முறியடிக்க வாய்ப்பு இல்லை.. லியோ படத்திற்கு ஏற்பட்டிருக்கும் சிக்கல்

இதுவரை இவர் மேற்கொண்ட கால அவகாசங்களை கணக்கிட்டால் இப்படமே அதிக நேரம் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் விஜய் நடிப்பில் பெரிய எதிர்பார்ப்பை உள்ளடக்கிய படம் என்பதால், அதற்கு ஏற்ற எஃபேட்டை போட்டு செதுக்கி வருகிறார் போல என கூறப்படுகிறது.

இதற்கு முன் இவரின் இயக்கத்தில் கமலின் கம்பேக் படமாய் பார்க்கப்பட்ட விக்ரம் படத்திற்கு இவர் மேற்கொண்ட நேரம் சுமார் 110 நாட்களே ஆகும். குறுகிய காலகட்டத்தில் இவர் மேற்கொண்டு படப்பிடிப்பு படத்திற்கு கூடுதல் சிறப்பை சேர்த்திருக்கும். அது மட்டும் இல்லாமல் இவரின் படங்கள் ஒன்றோடு ஒன்று தொடர்புடையதாகவும், அவற்றை லோகேஷ் யுனிவர்ஸ் என கூறப்பட்டு வருகிறது.

Also Read: வில்லன்களை வெறுக்கும் அளவிற்கு மோசமாக நடித்த 5 கதாபாத்திரங்கள்.. ரஜினிக்கு டஃப் கொடுத்த வர்மன்

மேலும் மாஸ்டர் படம் மேற்கொண்ட இவர் படப்பிடிப்பிற்கு எடுத்துக் கொண்ட நேரம் சுமார் 129 நாட்களாகும். விஜய் சேதுபதி, விஜய் ஆகியோர் ஸ்கோர் செய்த இப்படத்தின் வெற்றிக்கு லோகேஷும் ஒரு காரணமாக கூறப்படுகிறது. அவ்வாறு பார்த்து பார்த்து படப்பிடிப்பில் செதுக்கி வரும் லோகேஷின் டார்கெட் 500 கோடிக்கு மேல் வசூலில் முறியடிக்க வேண்டும் என்பதுதான்.

அவ்வாறு கார்த்தி நடிப்பில் வெளிவந்த கைதி படமும் மாபெரும் விமர்சனங்களை பெற்று, பாக்ஸ் ஆபீஸ் வசூலாய் 105 கோடியை பெற்று தந்தது. இதற்கு லோகேஷ் மேற்கொண்ட நேரம் சுமார் 62 நாட்களே ஆகும். அவ்வாறு சினிமாவில் கிடைத்த வாய்ப்பைக் கொண்டு சாதிக்க வேண்டும் என்ற வெறியோடு இவர் மேற்கொண்டு முதல் வெற்றி படம் தான் மாநகரம். இப்படத்தில் மேற்கொண்ட நாட்கள் வெறும் 45 நாட்களே ஆகும். அவ்வாறு குறுகிய காலத்தில் வெற்றியை தெறிக்க விட்டு வரும் இவரின் அடுத்த வசூல் 500 கோடிக்கு மேல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read: வில்லனுக்கு விஜய் சேதுபதி கொடுத்த வாக்குறுதி.. 17 வருடங்களுக்குப் பின் ஜெயிலரால் கிடைத்த அங்கீகாரம்

Trending News