தமிழ் திரையுலகில் சமீப காலமாக மெகா பட்ஜெட்டில் வெளிவரும் திரைப்படங்கள் அனைத்தும் வசூலை வாரி குவித்து கொண்டிருக்கிறது. தற்போது வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படம் பல திரைப்படங்களின் வசூல் சாதனையை முறியடித்துள்ளது. அந்த வகையில் ரிலீஸுக்கு முன்பே 200 கோடிக்கு மேல் வசூல் ஆகும் என்று எதிர்பார்க்கப்படும் ஐந்து திரைப்படங்களை பற்றி இங்கு காண்போம்.
விக்ரம் 2 லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் கடந்த ஜூன் மாதம் வெளிவந்த விக்ரம் திரைப்படம் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு கமல் நடித்த அந்த திரைப்படம் அவரின் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. மேலும் 500 கோடி வரை வசூலித்து சாதனை படைத்தது. அந்த வகையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கு தற்போது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. முதல் பாகத்தை போலவே அந்த படமும் எக்கச்சக்கமாக வசூலிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
தளபதி 67 தற்போது வாரிசு திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் விஜய் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். ஏற்கனவே விக்ரம் திரைப்படத்தின் மூலம் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்த லோகேஷ் இந்த திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளார். அந்த வகையில் இப்படம் நிச்சயம் 200 கோடியை தாண்டி வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பொன்னியின் செல்வன் 2 மணிரத்தினம் இயக்கத்தில் பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படம் உலக அளவில் வசூல் வேட்டை நடத்திக் கொண்டிருக்கிறது. அதனால் இப்போதே இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. அந்த வகையில் அடுத்த வருட கோடைக்கு பொன்னியின் செல்வன் 2 வெளியாக இருக்கிறது.
இந்தியன் 2 சங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் பல வருடங்களுக்கு முன்பு வெளியாக இந்தியன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இந்த திரைப்படமும் நிச்சயம் 200 கோடியை தாண்டி வசூலிக்கும் என்று கணிக்கப்படுகிறது.
கைதி 2 லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தியின் நடிப்பில் வெளிவந்த கைதி திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. அதை தொடர்ந்து அந்த படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளிவரும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். தற்போது விஜய் படத்தை இயக்க இருக்கும் லோகேஷ் கனகராஜ் அதை முடித்துவிட்டு கைதி 2 திரைப்படத்தை இயக்க இருக்கிறார். இப்படமும் 200 கோடியை தாண்டி வசூலிக்கும் என்று கூறப்படுகிறது.