வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

சிம்புவை நம்பி கடைசி வரை எடுக்க முடியாமல் போன 5 படங்கள்.. 25வது படத்தை கைவிட்ட கெட்டவன்

Simbu 5 Movies Dropped: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக சிம்பு டாப் இடத்திற்கு வந்திருக்க வேண்டியது. ஆனால் இவருடைய சோம்பேறியாலும், அசால்ட்தனமான நடவடிக்கைகளாலும் பல விஷயங்களை இழந்திருக்கிறார். அப்படித்தான் இவரை விட்டு சில படங்களும் கைவிடப்பட்டிருக்கிறது. அது என்னென்ன படங்கள் என்பதை தற்போது பார்க்கலாம்.

ஏசி: எஸ்ஜே சூர்யா இயக்கத்தில் சிம்பு நடிப்பில் ஏசி படம் உருவாக இருந்தது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் படக்குழு தரப்பிலிருந்து வெளியிட்டார்கள். அத்துடன் இப்படத்திற்காக பல போட்டோ ஷூட்கள் நடத்தப்பட்டது. மேலும் இதில் சிம்புவுக்கு ஜோடியாக ஆசின் கமிட் ஆகி இருந்தார். ஆனால் என்ன காரணத்திற்காக எடுக்க முடியாமல் போனது என்று இப்பொழுது வரை படக் குழு தரப்பிலிருந்து எந்த பதிலும் கொடுக்கவில்லை.

கான்: செல்வராகவன் படம் என்றாலே காதல் ரொமான்ஸ்க்கு எந்தவித பஞ்சமும் இருக்காது. அதற்கு ஏற்ற மாதிரி சிம்புவும் மன்மத ராஜாவாக தான் சுற்றித்திரிந்தார். அப்படிப்பட்ட இவர்களுடைய காம்போவில் உருவாகின படம் கான். அதற்கேற்ற மாதிரி இப்படத்தின் போஸ்டர் ரெடி ஆகி வெளியிட்டார்கள். அந்த வகையில் ரசிகர்களை குஷிப்படுத்தி விடும் என்று இருந்த நிலைமையில் படக் குழுவில் ஏற்பட்ட பிரச்சனையால் இப்படம் திடீரென்று கைவிடப்பட்டது.

Also read: 1000 கோடி வசூலுக்கு தயாராகும் STR48.. சிம்பு கொடுக்க போகும் பிறந்தநாள் சர்ப்ரைஸ்

வேட்டை மன்னன்: இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவான படம் தான் வேட்டை மன்னன். இப்படத்தின் படப்பிடிப்பு முக்கால்வாசி முடிக்கப்பட்ட நிலையில், டீசர் அனைத்தும் இணையத்தில் வெளியானது. இதில் சிம்புக்கு ஜோடியாக ஹன்சிகா கமிட் ஆகி இருந்தார். ஆனால் சில காரணங்களால் இப்படம் பாதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டது. இப்பொழுது வரை இவர்கள் மீண்டும் இணைவார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

கெட்டவன்: சிம்புவின் 25 வது படமாக கெட்டவன் படம் தயாராக இருந்தது. இப்படத்தை சிம்புவே இயக்கி நடிப்பதாகவும் இருந்த நிலையில் பல காட்சிகள் எடுக்கப்பட்டது. ஆனால் அது ரொம்பவே கிசுகிசுக்கப்பட்ட காட்சிகள் அதிகமாக இடம்பெற்றதால் சர்ச்சையில் இப்படத்தின் காட்சிகள் மோசமான விமர்சனத்தை பெற்றதோடு இப்படத்தை எடுக்காமல் பாதிலேயே வேண்டாம் என்று அப்படியே தலை முழுகி விட்டார்.

வாலிபன்: தயாரிப்பாளர் நிக் ஆர்ட்ஸ், எஸ் எஸ் சக்கரவர்த்தி தயாரிப்பில் 2010 ஆம் ஆண்டு வாலிபன் திரைப்படம் உருவாக இருந்தது. ஆனால் இப்படத்தின் போது சிம்புவின் நடவடிக்கைகள் எதுவுமே படப்பிடிப்புக்கு ஒத்து வராததால் தயாரிப்பாளர் படத்தை வேண்டாம் என்று முடிவு பண்ணி பாதிலேயே நிறுத்திவிட்டார். அப்படிப்பட்ட இப்படத்திற்க்கு யுவன் சங்கர் ராஜா தான் இசையமைப்பதற்கு கமிட்டாகி இருந்தார்.

அந்த வகையில் சிம்புவை நம்பி படங்களை ஆரம்பித்தால் தயாரிப்பாளருக்கும் இயக்குனருக்கும் இதுதான் கெதி என்பதற்கேற்ப பாதியிலேயே கைவிடப்பட்டிருக்கிறது. இந்த லிஸ்டில் தற்போது கமல் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் கமிட்டான படமும் சந்தேகம்தான் என்கிற அளவிற்கு பேச்சு அடிபட்டு வருகிறது.

Also read: தொட்டதெல்லாம் துலங்காமல் அவஸ்தை பட்டு வரும் சிம்பு.. படத்திலும் ரியலிலும் ஜீரோவான STR

Trending News