ரஜினி பட டைட்டிலை வைத்து ஹிட் கொடுத்த 5 படங்கள்.. வேற லெவலில் இருந்த சிவகார்த்திகேயனின் வேலைக்காரன்

சூப்பர் ஸ்டாராக தமிழ் சினிமாவில் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கும் நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய 71-வது வயதிலும் கதாநாயகனாகவே தற்போது வரை நடித்துக் கொண்டிருக்கிறார். இவருடைய நடிப்பில் சூப்பர் ஹிட் அடித்த படங்களின் டைட்டிலை அப்படியே வைத்து வெளியான 5 படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதிலும் ரஜினி நடித்த வேலைக்காரன் தொடர்ந்து, சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வேலைக்காரன் வேற லெவலில் இருந்தது.

வேலைக்காரன்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 1987 ஆம் ஆண்டு முத்துராமன் இயக்கிய வேலைக்காரன் என்ற நகைச்சுவை திரைப்படம் திரையரங்கில் 75  நாட்களுக்கு மேல் ஓடி வசூல் சாதனை படைத்தது. இதே டைட்டிலை வைத்து சிவகார்த்திகேயன் நடிப்பில் 2017 ஆம் ஆண்டு வெளியான வேலைக்காரன் 40 கோடி பொருட்செலவில் எடுக்கப்பட்டு வேற லெவல் ஹிட் கொடுத்தது.

இதில் சிவகார்த்திகேயனுடன் பகத் பாசில், சினேகா, நயன்தாரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இதில் சிவகார்த்திகேயன் குழந்தைகளுக்கு சாப்பிட கொடுக்கும் உணவுகளில் எப்படி எல்லாம் கலப்படங்கள் நடைபெறுகிறது என்பதை இந்தப் படத்தில் வேறு லெவலில் சொல்லியிருப்பார்.

Also Read: அவரு கூப்பிட்டாருனு என் இமேஜை கெடுத்துக்க முடியாது.. ரஜினியுடன் நடிக்க மறுத்த சிவகார்த்திகேயன்

நான் மகான் அல்ல: ரஜினி நடிப்பில் 1984 ஆம் ஆண்டு ‘நான் காந்தி அல்ல’ என்ற பெயருடன் வெளிவர இருந்த படத்தை, தணிக்கைக் குழுவினால் பெயர் மாற்றம் செய்து ‘நான் மகான் அல்ல’ என்று திரையிட்டனர். இதே தலைப்பில் அதன் பின் 2010 ஆம் ஆண்டு கார்த்தி, காஜல் அகர்வால் நடிப்பில் அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக வெளியானது.

இந்தப் படத்தில் வேலை இல்லாத கவலையற்ற இளைஞரான கார்த்தி, அதன்பிறகு பொறுப்புடையவனாக மாறும்போது ஏற்படும் சிக்கலையும், அதிலிருந்து அவர் மீண்டு வருவதையும் இந்த படத்தில் காட்டியிருப்பார்கள்

மனிதன்: 1987 ஆண்டு முத்துராமன் இயக்கத்தில் ரஜினி நடித்த இந்த படம் சுமார் 175 நாட்களுக்கு மேல் திரையரங்கில் கொடி வசூல் சாதனை படைத்தது. நடிகை ரூபினி இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.

இதே தலைப்பில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் 2016 ஆம் ஆண்டு வெளியான படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதில் நீதிமன்றத்தில் சாலையோரத்தில் ஏற்படும் விபத்தினால் அப்பாவி பொதுமக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு உதயநிதி ஒரு வழக்கறிஞராக விடாப்பிடியாக நீதி கேட்டிருப்பார்.

Also Read: மணிரத்தினத்தை தூக்கி சாப்பிட்ட ரஜினி.. சூப்பர் ஸ்டார் கற்பனையில் பொன்னியின் செல்வன்

நான் சிகப்பு மனிதன்: 1985 ஆம் ஆண்டு ரஜினி, சத்யராஜ், அம்பிகா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த ‘நான் சிவப்பு மனிதன்’ திரைப்படம், பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பியது. இதே டைட்டிலில் 2014 ஆம் ஆண்டு விஷால் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

இந்தப்படத்தில் விஷாலுக்கு அதிக சத்தத்தை கேட்டால் உடனே ஆழ்ந்த தூக்கத்திற்கு போய்விடுவார். இந்தப் பிரச்சனை இருக்கும் போது இவருடைய அன்றாட வாழ்க்கையில் எப்படி வாழ்கிறார். அவர் எப்படி லட்சுமி மேனனை திருமணம் செய்து கொள்வார் என சுவாரசியமான கதைக்களத்தை கொண்ட இந்த படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.

Also Read: சிவகார்த்திகேயன் பட போஸ்டரை அட்டை காப்பி அடித்த நெல்சன்.. உத்திராட்சக் கொட்டை மட்டும் மிஸ்ஸிங்

கழுகு: 1981 ஆம் ஆண்டு ரஜினி, ரதி ஜோடி சேர்ந்த கழுகு படத்திற்கு நல்ல வசூல் கிடைக்காவிட்டாலும், தோல்விப்படம் என்று சொல்ல முடியாது. ஹாலிவுட் ஜானர் திரைப்படத்தை போல் இருக்கும இந்த படத்தில் வரும் சொகுசுப் பேருந்து அந்தக்காலத்தில் விசேஷமாக பேசப்பட்டது.

படுக்கையுடன் கூடிய அந்த சொகுசு பேருந்து உருவாக்க அந்த காலத்தில் 7 லட்சம் ரூபாய் செலவானது. அந்த சொகுசு பேருந்தில் தான் ரஜினியின் முதலிரவும் நடக்கும். இதே டைட்டிலை வைத்து 2012 ஆம் ஆண்டு கிருஷ்ணா, பிந்து மாதவி இணைந்து நடித்த காதல் திரைப்படமாக வெளியானது. இதில் மலைப்பகுதிகளில் இருக்கும் அழகை படம் முழுவதும் காண்பித்து, அங்கு மலரும் காதலை படமாக்கி இருப்பார்கள், இந்தப்படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது.

இவ்வாறு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த படத்தின் டைட்டிலை வைத்து சூப்பர் ஹிட் அடித்த 5 படங்கள் இன்றும் ரசிகர்களின் மனதில் அடிக்கடி பார்க்கத் தூண்டும் படங்களாகவே இருக்கிறது.

Next Story

- Advertisement -