ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

கல்யாணம் பண்ண மாட்டோம்னு வெட்டி சபதம் போட்ட 5 படங்கள்.. ஜொள்ளு விட்டு முதல் ஆளாய் அஜித் பண்ணிய காதல்

5 films that vowed never to marry: வித்தியாசமான கதைகளுடன் எத்தனையோ படங்களை நாம் பார்த்திருப்போம். அதிலும் சில ஹீரோக்கள் ஜம்பமாக எனக்கு காதலே பிடிக்காது, பெண்கள் கண்டாலே எட்டடி தூரத்துக்கு ஓடிப் போய் விடுவேன். கல்யாணம் பண்ண மாட்டோம் என வெட்டி சபதம் போட்டிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் தான் மற்றவர்களை விட முதலில் காதல் கல்யாணத்தை பண்ணி இருக்கிறார்கள். அப்படிப்பட்ட சில படங்களை பற்றி பார்க்கலாம்.

பம்மல் கே சம்பந்தம்: மௌலி இயக்கத்தில் 2002 ஆம் ஆண்டு பம்மல் கே சம்பந்தம் திரைப்படம் வெளிவந்தது. இதில் கமல், சிம்ரன், சினேகா, அப்பாஸ் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் கதையானது கமல் திருமண பந்தத்தை அடியோடு வெறுத்து வருவார். அந்த சமயத்தில் சிம்ரன் மீது ஏற்பட்ட பிரியம் கொஞ்சம் கொஞ்சமாக காதலாக மாறிய கல்யாணத்தில் போய் முடியும் அளவிற்கு நகைச்சுவை கலந்த கதையாக அமைந்திருக்கும்.

என்றென்றும் புன்னகை: ஐ. அகமது இயக்கத்தில் 2013ஆம் ஆண்டு ஜீவா, சந்தானம், வினய் ராய் மற்றும் த்ரிஷா நடிப்பில் என்றென்றும் புன்னகை திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தில் ஜீவா நண்பர்களுடன் இருப்பது மட்டும்தான் சந்தோஷம். காதல், கல்யாணம், குடும்ப வாழ்க்கை எல்லாம் சுத்த வேஸ்ட் என்பதற்கு ஏற்ப பெண்களை வெறுத்து வருவார். அப்படிப்பட்டவர் கொஞ்சம் கொஞ்சமாக த்ரிஷாவின் அழகில் மயங்கி அவர் மீது ஏற்பட்ட பிரியம் காதலாக மாறி கல்யாணத்தில் போய் முடிந்துவிடும்.

Also read: காதல் கதைகள் தோத்து சூப்பர் ஹிட் ஆன 5 படங்கள்.. விஜய்யின் சோகம் கூட சுகமானது 

கப்பல்: கார்த்திக் ஜி. கிரிஷ் இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு கப்பல் திரைப்படம் வெளிவந்தது. இதில் வைபவ், சோனம் பஜ்வா, கருணாகரன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் கதையானது நான்கு நண்பர்களை சுற்றி ஜாலியாக அமைந்திருக்கும். அப்படிப்பட்ட நட்புக்குள் பெண்கள் காதல் என்று அமைந்து விட்டால் நட்பு பாழாகிவிடும் என்ற காரணத்திற்காக கல்யாணம் பண்ணக்கூடாது என்ற சபதம் போட்டிருப்பார்கள். ஆனால் இதில் வைபவ் திருமணத்தை செய்து கொள்வார்.

நவீன சரஸ்வதி சபதம்: கே.சந்துரு இயக்கத்தில் 2013ம் ஆண்டு நவீன சரஸ்வதி சபதம் திரைப்படம் வெளிவந்தது. இதில் ஜெய், நிவேதா தாமஸ், விடிவி கணேஷ், சத்யன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் கதை ஆனது நண்பர்களாகவே எப்பொழுதும் சந்தோஷமாக வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும் என்று ஒவ்வொருவரும் முடிவு எடுத்து இருப்பார்கள். ஆனால் கடைசியில் சொன்னது வேற, செய்தது வேற என்பதற்கு ஏற்ப கல்யாணத்தில் போய் முடிந்து விடும்.

வீரம்: இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு அஜித் மற்றும் தமன்னா நடிப்பில் வீரம் திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தின் கதை ஆனது அஜித் மூத்த அண்ணனாக இருந்து மூன்று தம்பிகளை வழிநடத்தும் விதமாக கதை நகரும். அத்துடன் அஜித், கல்யாணம் பண்ணி மனைவி என்று ஒருத்தி வந்து விட்டால் தம்பிகளை பிரித்து விடுவார் என்பதற்காக திருமணத்தையே வெறுத்து வருவார். அத்துடன் தம்பிகளிடமும் கல்யாணம் பண்ணக்கூடாது என்று சபதம் போடச் சொல்வார். ஆனால் இப்படி எல்லாம் சொல்லிவிட்டு தமன்னாவை பார்த்ததும் முதல் ஆளாக ஜொள்ளுவிட்டு அவரை கல்யாணம் பண்ண போராடுவார்.

Also read: கண்ணும் கண்ணும் பேசி ரொமான்டிக்கை தெறிக்கவிட்ட விஜய் அஜித்தின் 5 படங்கள்.. ரெண்டு பேரும் வளர்வதற்கு காரணமான காதல்

- Advertisement -

Trending News