வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

கம்மி பட்ஜெட்டில் அதிக வசூலை அள்ளிய 5 படங்கள்.. நா தான் பெருசு என ராஜமௌலின் பிம்பத்தை உடைத்த படம்

Movie Kantara: படங்களை பொறுத்தவரை, கதையால் தான் மக்களிடையே நிற்கும் என நிரூபித்த படங்களும் தமிழ் சினிமாவில் உண்டு. அவ்வாறு குறைந்த பட்ஜெட்டில் பெரிய லாபத்தை தட்டி தூக்கிய இயக்குனர்கள் ஏராளம்.

ஒன்றுக்கு ஒன்று சளைத்ததல்ல என அடுத்தடுத்து வரும் படங்களை முறியடிக்கும் விதமாக அமைந்த படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இது போன்று கம்மி பட்ஜெட்டில் அதிக வசூலை அள்ளிய 5 படங்கள் பற்றிய தகவலை இங்கு காண்போம்.

Also Read: ஆதிரையை அடைய நாக்கை தொங்க போட்டு அலையும் கரிகாலன்.. புது மாப்பிள்ளைக்கு கொடுத்த அதிர்ச்சி வைத்தியம்

டான்: சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் லைக்கா தயாரிப்பில் சிவகார்த்திகேயன், எஸ் ஜே சூர்யா, பிரியங்கா அருள் மோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். எதார்த்தமான கல்லூரி வாழ்க்கையை மையமாக கொண்டு கதை அமைக்கப்பட்டிருக்கும். மேலும் இப்படம் மக்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்றும், 50 கோடி பட்ஜெட்டில் இரட்டிப்பு லாபமாய் 100 கோடி வசூலை பெற்றது.

சர்தார்: பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் ஆக்சன் திரில்லர் படமாய் வெளிவந்த இப்படத்தில் கார்த்தி, ராசி கண்ணா, லைலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். தண்ணீரின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாய் கதை அமைக்கப்பட்டு இருக்கும். இப்படம் சுமார் 40 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு 116 கோடி வசூலை பெற்று தந்தது. மேலும் இப்படத்தில் கார்த்திக்கின் நடிப்பு மக்களிடையே பெரிதும் பேசப்பட்டது.

Also Read: கமல், அஜித், சூர்யா ஒன்றாக நடிக்க முயற்சி.. லோகேஷ் யுனிவர்ஸலை உடைக்க கௌதம் மேனன் போட்ட திட்டம்!

திருச்சிற்றம்பலம்: சன் பிக்சர்ஸ் வழங்கிய இப்படத்தில் பிரகாஷ் ராஜ், பாரதிராஜா, நித்யா மேனன், தனுஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்திருப்பார்கள். இப்படம் காதலின் ஆழத்தை உணர்த்தும் விதமாய் மக்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்று தந்தது. அதுவும் சுமார் 30 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் நான்கு மடங்கு லாபமாக 110 கோடி வசூலை பெற்று தந்தது.

லவ் டுடே: பிரதீப் ரங்கநாதன் இயக்கி, நடித்த படம் தான் லவ் டுடே. அதிலும் ஆக்சன் கலந்த ரொமாண்டிக் படமான இப்படம் மக்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்று தந்தது. சுமார் 5 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் பாக்ஸ் ஆபிஸ் வசூலாக 100 கோடியை பெற்று தந்தது. கம்மி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு மாபெரும் வெற்றியை கொடுத்து வாய்ப்பிளக்க செய்தது.

Also Read: கவுண்டமணி என் வாழ்க்கையை நாசமாக்கிட்டாரு.. அண்ட புளுகு நடிகையின் முகத்திரையை கிழித்த பயில்வான்

காந்தாரா: ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்த கன்னட மொழி படம் தான் காந்தாரா. இப்படம் தெய்வமாக கருதும் காந்தாராவை தொன்று தொட்டு கடைபிடிக்கும் சம்பவத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டு, தன் நடிப்புத் திறமையால் இயக்குனர் தத்துரூபமாக கொண்டு சென்று இருப்பார். இப்படம் சுமார் 16 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு, 400 கோடி வசூலை பெற்று பாகுபலி, கே ஜி எஃப் போன்ற படங்களை திரும்பிப் பார்க்க செய்தது. மேலும் படத்தில் போடப்பட்ட குறைந்த பட்ஜெட், ராஜமவுலியின் பிம்பத்தை உடைக்கும் விதமாய் மாபெரும் வெற்றியை கண்டது.

Trending News