கடந்த வருட இறுதியில் ரிலீசான ஒரு சில படங்கள் மக்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை கிளப்பிய நிலையில், படு மொக்கையாக இருந்து இருக்கின்றன. ஆனாலும் அந்த படக்குழுக்கள் கொஞ்சமும் மனம் தளராது அந்த மொக்கை படங்களுக்கும் வெற்றி விழா கொண்டாடி இருக்கின்றன. இது நெட்டிசன்களிடையே பல கிண்டலான விமர்சனங்களையும் பெற்றது.
பிரின்ஸ்: டான், டாக்டர் என அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்த நடிகர் சிவகார்த்திகேயன், தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் பிரின்ஸ் என்னும் திரைப்படத்தில் நடித்தார். முந்தைய படங்களின் வெற்றியின் காரணமாக மிகப்பெரிய எதிர்பார்ப்பு இந்த படத்தின் மீது இருந்தது. ஆனால் இந்த படம் மரண மொக்கை திரைப்படமாக அமைந்தது.
டிஎஸ்பி: இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்த திரைப்படம் டிஎஸ்பி. நீண்ட நாட்களுக்கு பின் நடிகர் விஜய் சேதுபதிக்கு இந்த படம் தியேட்டர் ரிலீஸ் ஆக அமைந்தது. சேதுபதி படம் போல் விஜய்சேதுபதிக்கு இந்த படம் அமையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் படுதோல்வியடைந்தது. ஆனால் படம் ரிலீஸ் ஆகி மூன்றே நாட்களில் இந்த படத்திற்கு வெற்றி விழா கொண்டாடப்பட்டது.
Also Read: காத்து வாங்கும் தியேட்டர்கள், அரண்டு ஓடும் ஆடியன்ஸ்.. விஜய் சேதுபதியின் டிஎஸ்பி முழு விமர்சனம்
விருமன்: இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கொம்பன் வெற்றிக்கு பிறகு நடிகர் கார்த்தி நடித்த திரைப்படம் விருமன். இந்த படத்தில் இயக்குனர் சங்கரின் மக்கள் அதிதி சங்கர் கதாநாயகியாக நடித்திருந்தார். மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்களோடு உருவான இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை அடையாமல் ஏமாற்றத்தையே கொடுத்தது.
தி வாரியர்: இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் ராம் பொத்தினேனி, கிர்த்தி ஷெட்டி, ஆதி, நதியா ஆகியோர் நடித்த திரைப்படம் தி வாரியர். வழக்கமான தமிழ் சினிமாவின் போலீஸ்-ரவுடி கதையாகவே இந்த படத்தின் கதை இருந்தது. தொடர் தோல்விகளை கொடுத்து வரும் லிங்குசாமிக்கு இந்த படமும் தோல்வி படமாகவே அமைந்தது.
Also Read: அரைச்ச மாவையே அரைத்து புளிக்க வைத்த முத்தையா.. விருமன் ஒரு நேர்மையான விமர்சனம்
எதற்கும் துணிந்தவன்: இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்த திரைப்படம் எதற்கும் துணிந்தவன். சில வருடங்களாக தியேட்டர் ரிலீஸ் இல்லாமல் இருந்த சூர்யாவுக்கு இந்த படம் தான் முதலில் தியேட்டர் ரிலீஸ் ஆக அமைந்தது. நல்ல குடும்ப பின்னணி கதையை கொண்டிருந்தாலும் இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
நாய் சேகர் ரிட்டன்ஸ்: பல வருடங்களாக சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த வடிவேலு இந்த படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். இந்த படத்தின் டைட்டிலை வாங்கியதில் இருந்தே படக்குழுவாக இருக்கட்டும், வடிவேலுவாக இருக்கட்டும் ஓவர் அலப்பறையை ஏற்றி கொண்டு இருந்தனர். ஆனால் வடிவேலுவுக்கு இந்த படம் தோல்வி படமாக அமைந்தது.
Also Read: நாய் சேகர் ரிட்டன்ஸால் தலையில் துண்டை போட்ட தயாரிப்பாளர்.. சிரிப்பாய் சிரிக்கும் முதல் நாள் வசூல்