சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

ஹீரோயின் ஓகே சொல்லியும் லிப்லாக்குக்கு நோ சொன்ன 5 ஹீரோக்கள்.. திரிஷாவிடம் விஜய் சேதுபதி கூறிய லாஜிக்

5 Heroes Said No To Lip Lock:  இப்போதெல்லாம் படங்களில் லிப்லாக் காட்சி என்பது சர்வசாதாரணமாகி விட்டது. அதிலும் ஹீரோயின்கள் கூச்சப்படாமல் அதற்கு ஓகே சொல்லிவிடுகின்றனர். அப்படி ஹீரோயின் இறங்கி வந்தும் கூட ஹீரோக்கள் அதற்கு நோ சொல்லிய சம்பவமும் நடந்து இருக்கிறது. அந்த ஹீரோக்கள் யார் என்று இங்கு காண்போம்.

சூர்யா: கே வி ஆனந்த் இயக்கத்தில் சூர்யா ஒட்டிப்பிறந்த இரட்டையர்களாக நடித்த மாற்றான் படத்தில் ஒரு லிப் லாக் சீன் இருக்கிறது. ஆனால் அந்த காட்சியை சொல்லும்போது காஜல் அகர்வால் ஓகே சொல்லியும் சூர்யா நோ சொல்லிவிட்டாராம். அதன் பிறகு அதை VFX முறையில் எடுத்திருக்கின்றனர். ஆனால் பார்ப்பதற்கு நிஜம் போலவே அந்த காட்சி இருக்கும்.

சிவகார்த்திகேயன்: ரெமோ படத்தில் கீர்த்தி சுரேஷுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் ஒரு லிப்லாக் காட்சி இருந்திருக்கிறது. அதை இயக்குனர் சொன்னபோது சிவகார்த்திகேயன் வேண்டாம் என்று கூறிவிட்டாராம்.

இத்தனைக்கும் கீர்த்தி அதற்கு சம்மதித்திருக்கிறார். அதேபோன்று பிரின்ஸ் படத்தில் கூட ஒரு லிப்லாக் காட்சி இருந்திருக்கிறது. ஆனாலும் சிவகார்த்திகேயன் நோ சொல்லி இருக்கிறார்.

Also read: 6 கிளாமர் குயின்ஸ் சேர்ந்து நடித்த ஒரே படம்.. கவர்ச்சியில் வீழ்த்தி விடலாம் என நினைத்து கிரண் வாங்கிய கும்மாங்குத்து

விஜய் சேதுபதி: திரிஷாவுடன் இவர் இணைந்து நடித்த 96 இப்போதும் ரசிகர்களின் ஃபேவரைட் படமாக இருக்கிறது. அதில் கிளைமாக்ஸ் காட்சியில் இருவருக்கும் இடையே ஒரு லிப்லாக் காட்சி இருந்திருக்கிறது.

திரிஷாவும் அதற்கு ஓகே சொல்லிவிட்டாராம். ஆனால் விஜய் சேதுபதி அப்படி ஒரு காட்சி இருந்தால் நன்றாக இருக்காது. கொச்சைப்படுத்துவது போல் இருக்கும் என கூறி அதற்கு மறுப்பு தெரிவித்து இருக்கிறார்.

சிபிராஜ்: இவர் நடித்த சத்யா படத்தில் ஹீரோயின் ரம்யா நம்பீசன் உடன் ஒரு லிப்லாக் காட்சி வைக்க இயக்குனர் முடிவு செய்திருக்கிறார். ஹீரோயினும் அதற்கு ஓகே சொல்லி இருக்கிறார். ஆனால் சிபிராஜ் என் படத்தை என்னுடைய மகன் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் பார்ப்பார்கள். அதனால் இது போன்ற காட்சி வேண்டாம் என்று மறுத்திருக்கிறார்.

Also read: 49 வயதில் நக்மாவிற்கு வந்த கல்யாண ஆசை.. பாட்ஷாவின் காதலிக்கு இருந்த நிஜமான 4 எக்ஸ் காதலர்கள்

உதயநிதி: இவர் நடித்த கலகத்தலைவன் படத்தில் இப்படி ஒரு லிப் லாக் சீன் இருந்திருக்கிறது. ஹீரோயின் நிதி அகர்வாலும் அதற்கு சம்மதித்திருக்கிறார். ஆனால் உதயநிதி முடியவே முடியாது என்று மறுத்ததால் கிராபிக்ஸ் முறையில் எடுத்திருக்கின்றனர்.

Trending News