புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

2022-ல் ஐந்து ஹீரோயின்ஸ்-க்கு எகிறிய மார்க்கெட்.. இளவரசியாக சிம்மாசனத்தில் அமர்ந்த குந்தவை திரிஷா

2022 ஆம் ஆண்டில் டாப் 5 ஹீரோயின்களின் மார்க்கெட் அவர்களது சம்பளமும் பல மடங்கு உயர்ந்துள்ளது. அதிலும் திரிஷா இளவரசி குந்தவையாக தற்போது கோலிவுட்டில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கிறார்.

இவானா: நிகிதாவாக லவ் டுடே படத்தின் மூலம் இளசுகளை கொள்ளையடித்த இவரும் மலையாள நடிகை தான். 2012 ஆம் ஆண்டு மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக தோன்றிய இவர். அதன்பின் 2018 ஆம் ஆண்டு பாலா இயக்கத்தில் வெளியான நாச்சியார் திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் என்ட்ரி கொடுத்தார். இதன் பின் இவர் லவ் டுடே படத்தின் மூலம் செம க்யூட்டாக நடித்து 2022 ஆம் ஆண்டு ரசிகர்களை வெகுவாக ஈர்த்த நடிகைகள் லிஸ்டில் இடம்பெற்றதுடன் இவருடைய மார்க்கெட் தற்போது பல மடங்கு எகிறி விட்டது.

சித்தி இட்னானி: தெலுங்கு திரையுலகில் பரிச்சயமான இவர், வெந்து தணிந்தது காடு படத்தின் மூலம் பாவை என்ற கதாபாத்திரத்தில் நடித்து தன்னுடைய இயல்பான நடிப்பை வெளிக்காட்டி இருக்கிறார். இவர் க்யூட்டாக செய்யும் ஒவ்வொரு ரியாக்ஷன்களும் பார்ப்போரை வெகுவாக கவர்ந்திழுத்தது. ஆகையால் சமீபத்தில் மார்க்கெட் எகிறிய நடிகைகளில் இவரும் ஒருவர் ஆவார்.

Also Read: 2022 ஆம் ஆண்டு ட்ரெண்டிங்கில் இருந்த டாப் 6 ஹீரோயின்ஸ்.. ரசிகர்களை திணறடித்த லவ் டுடே நிகிதா

ஐஸ்வர்யா லட்சுமி: மலையாள நடிகையான இவர் தமிழில் தனுஷ் உடன் ஜகமே தந்திரம் படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார். இந்த படத்திற்காக இவருக்கு சிறந்த தென்னிந்திய அறிமுக நடிகைக்கான ஃபிலிம் பெயர் விருதும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. அதை தொடர்ந்து பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலியாக நடித்து இளசுகளின் மனதை வெகுவாக கவர்ந்தார்.

பொன்னியின் செல்வன் படத்தால் இவருக்கு லக்கி பிரைஸ் அடித்தது போல் அடுத்ததாக கட்டா குஸ்தி படத்தில் விஷ்ணு விஷாலுடன் கதாநாயகியாக நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்து, சினிமாவில் என்ட்ரி கொடுத்த உடனேயே இவருடைய மார்க்கெட் சரசரவென எகிறி விட்டது.

ராஷ்மிகா மந்தனா: கன்னட நடிகையான இவர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் 2021 ஆம் ஆண்டு கார்த்தியுடன் சுல்தான் படத்தின் மூலம் நடித்து கோலிவுட்டில் என்ட்ரி கொடுத்தார். அதன் பின் வரும் பொங்கலுக்கு ரிலீசாகும் தளபதி விஜயின் வாரிசு படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

மேலும் இந்தப் படத்தில் இடம்பெற்றிருக்கும் ரஞ்சிதமே என்கின்ற பாடல் சமீபத்தில் வெளியாகி ட்ரெண்டாக்கிக் கொண்டிருக்கிறது. இதில் எக்ஸ்பிரஷன் குயின் ராஷ்மிகாவின் ஆட்டம் இளசுகளை குத்தாட்டம் போட வைத்து, 2022ல் ரசிகர்களின் ஃபேவரிட் ஹீரோயினாக மாறியதுடன் இவருடைய மார்க்கெட் எக்குத்தக்கமாக எகிறிவிட்டது.

Also Read: 2022 ஆம் ஆண்டு ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்த 5 நடிகைகள்.. கனவுக்கன்னி ஆன தளபதியின் கதாநாயகி

திரிஷா: மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் குந்தவையாக நடித்த திரிஷா, அந்தக் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தி ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்திருக்கிறார். 39 வயதான திரிஷா இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் நிலையில் இப்போது இருக்கும் டாப் ஹீரோயின்களின் லிஸ்டில் இடம்பெற்றதுடன் பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு இவருடைய மார்க்கெட் எகிறி உள்ளது.

இவ்வாறு இந்த 5 நடிகைகளும் சமீபத்தில் மார்க்கெட் எகிறிய கதாநாயகிகள் ஆவார்கள். அதிலும் ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் திரிஷா இருவருக்கும் பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் லக்கி பிரைஸ் அடித்திருக்கிறது.

Also Read: லவ் டுடே படத்தால் உச்சாணி கொம்புக்கு சென்ற இவானா.. விளம்பரத்தில் நடிக்க 4 கோடி சம்பளமா?

Trending News