வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே.. சீனு ராமசாமி போல நடிகையால் சந்திசிரித்த 5 ஜாம்பவான்கள்

5 Legends Damaged Actress in Public : திரைத்துறையில் உச்சத்தில் இருக்கும் பிரபலங்களை சீண்டும் விதமாக அவர்களை பெண்ணுடன் தொடர்புபடுத்தி அவர்களின் நன்னடத்தையே கேள்விக்குறியாகி மார்க்கெட் இழக்க வைத்து தரைமட்டம்  ஆக்கும் சம்பவம் சமீப காலங்களில் அரங்கேறி வருகிறது. இதில் எந்த அளவுக்கு உண்மை தன்மை உள்ளது என்பது கடவுளுக்கு மட்டுமே வெளிச்சம். இப்படியாக தமிழ் சினிமாவில் சில பிரபலங்கள், பெண்களுடன் தொடர்புபடுத்தி சரிந்த கதையும் உண்டு அவர்களில் சிலர்,

வைரமுத்து: பலமுறை தேசிய விருதை சொந்தமாக்கிக் கொண்ட கவிஞர் வைரமுத்து அவர்களை மீ டூ மூலம் பாடகி சின்மயி குற்றச்சாட்டு ஒன்றை வைத்தார். இதற்கு பதில் அளித்த வைரமுத்து உண்மைக்கு புறம்பான எதையும் நான் பொருட்படுத்துவதில்லை உண்மையை காலம் சொல்லும் என்றார்.

சிவகார்த்திகேயன்:  இசை அமைப்பாளர் இமான் அவர்கள் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் சிவகார்த்திகேயன் தனக்கு துரோகம் செய்து விட்டதாகவும் தன்னுடைய விவாகரத்துக்கு அவரும் ஒரு காரணம் என்பது போலவும் கூறி இருந்தார்.  இமானின் மனைவி இதை மறுத்திருந்தார். சிவகார்த்திகேயனின் வளர்ச்சி அனைவரும் அறிந்ததே எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் இவரின் நன்னடத்தையை கெடுக்கும் விதமாக இது அமைந்தது.

Also Read: தூக்கிவிட்டதற்கே துரோகம் செய்த சிவகார்த்திகேயன்.. எந்த காலத்திலும் அவர் கூட கூட்டணி போட மாட்டேன்

சீனு ராமசாமி: “இடம் பொருள் ஏவல்” படத்தை இயக்கி வரும் சீனு ராமசாமி  நடிகை மனிஷா யாதவுக்கு அந்தரங்க தொல்லை கொடுத்ததாக சினிமா விமர்சகர் பிஸ்மி அவர்கள் அறிவிப்பு வெளியிட்டார்.  இதற்கு பதில் அளித்த சீனு ராமசாமி, படத்தில் இருந்து பெண்ணை நீக்கினால் இப்படி ஒரு பழியா? என அடுக்கடுக்கான கேள்விகள் கேட்டு வன்மையாக சாடியுள்ளார்.  இவ்விவகாரம் திரைத்துறையில் அதிர்ச்சி அலைகளை கிளப்பி வருகிறது.

மன்சூர் அலிகான்: லியோ பட விழாவில் மன்சூர் அலிகான் பேசியது பல சர்ச்சைகளை கிளப்பியது. மனதில் பட்டதை பேசுகிறேன் என்ற பெயரில் வார்த்தைகளை கொட்டி அனைவரின் கண்டனத்திற்கும் உள்ளானார். த்ரிஷாவுடன் ஒரு அந்தரங்க காட்சியில் நடிக்க விடாமல் செய்துவிட்டார் லோகேஷ் என்று கூறிய சர்ச்சை பெரும் அணுகுண்டாக வெடித்தது. பின் த்ரிஷாவிடம் மன்னிப்பு கேட்டதோடு இந்த சர்ச்சை முற்றுப்பெற்றது.

ராதாரவி: எம் ஆர் ராதாவின் மகன் என அடையாளத்துடன் சினிமாவில் கால் பதித்த ராதாரவி பல படங்களில் நடிகராகவும் குணசித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார். சில வருடங்களுக்கு முன்பு நடிகைகள் குறித்த சர்ச்சைக்குரிய கருத்துக்களை பகிர்ந்த ராதாரவி மீது பல கண்டனங்கள் வலுத்த நிலையில் திமுகவிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார் ராதாரவி.

பழைய கிளாஸ்சிக் டயலாக் ஆன “ஆவதும் பெண்ணாலே! அழிவதும் பெண்ணாலே!” என்பது போல் அரசன் முதல் ஆண்டி வரை பலதரப்பட்ட மனிதர்களும் பெண்கள் விஷயத்தில் சிக்கி சின்னா பின்னம் ஆகிறார்கள்.  இதில் இருக்கும் உண்மை, நியாயம் என்பதெல்லாம் கடவுளைத் தவிர யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

Also Read: எஸ்கேப் ஆன சிவகார்த்திகேயன், மன்சூர் அலிகான்.. ப்ளூ சட்டை வாயில் விழுந்து சின்னாபின்னமாகும் இயக்குனர்

Trending News