புதன்கிழமை, ஜனவரி 15, 2025

காதல் கதைகள் தோத்து சூப்பர் ஹிட் ஆன 5 படங்கள்.. விஜய்யின் சோகம் கூட சுகமானது 

5 screen epics that are treasured by lovers: இன்று காதலர் தினத்தை கொண்டாடும் அனைத்து காதலர்களுக்கும் இனிய காதல் தின நல்வாழ்த்துக்கள். எத்தனை கஷ்டங்கள் மனசுல இருந்தாலும் நமக்கு பிடித்தவர்கள் நம் மீது காட்டும் காதல் எல்லாத்தையும் கடந்து போக வைக்கும். காதலில் ஜெயித்தவர்கள் மட்டும் இல்லை, தோல்வி அடைந்திருந்தாலும் அவர்களுக்கு காதல் என்றாலே ஒரு தனி சுகம் தான். அப்படிப்பட்ட காதலர்கள் பொக்கிஷமாக கொண்டாடும் ஐந்து திரை காவியங்களை பற்றி தற்போது பார்க்கலாம்.

ஆட்டோகிராப்: சேரன் இயக்கத்தில் 2004 ஆம் ஆண்டு ஆட்டோகிராப் திரைப்படம் வெளிவந்தது. இதில் சேரன், சினேகா, கோபிகா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தை பார்க்கும் பொழுது நிஜத்தை விட நினைவுகள் தரும் வலியே அதிகம். இதுவும் கடந்து போகும் ஆனால் எதுவும் மறந்து போகாது என்பதற்கு ஏற்ப இப்படத்தில் சேரனின் காதல், தோல்வியாக முடிந்தாலும் கடைசிவரை காதலை மனதில் சுமந்து கொண்டு பொக்கிஷமாக வைத்திருப்பார்.

பூவே உனக்காக: இயக்குனர் விக்ரமன் இயக்கத்தில் 1996 ஆம் ஆண்டு விஜய் மற்றும் சங்கீதா நடிப்பில் பூவே உனக்காக திரைப்படம் வெளிவந்தது. காதல் என்றாலே ஒரு சோகமான ஒரு உணர்வை ஏற்படுத்த தான் செய்யும். ஆனால் அந்த சோகம் கூட சுகமானது என்று காதலை சுமந்து கொண்டு போயிருப்பார். அதிலும் கிளைமாக்ஸ் காட்சியில், 100 வருஷம் ஆனாலும் எங்கோ ஒரு மூலையில் அந்த முதல் காதல் வந்து ஞாபகப்படுத்திக்கிட்டு தான் இருக்கும் என்ற வரிகள் காதலில் தோல்வி அடைந்தவர்களுக்கு இப்படம் மிகப்பெரிய சமர்ப்பணமாக அமைந்திருக்கும்.

Also read: கண்ணும் கண்ணும் பேசி ரொமான்டிக்கை தெறிக்கவிட்ட விஜய் அஜித்தின் 5 படங்கள்.. ரெண்டு பேரும் வளர்வதற்கு காரணமான காதல்

காதலர் தினம்: இயக்குனர் கதிர் இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு குணால், சோனாலி நடிப்பில் காதலர் தினம் திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தை எத்தனை வருடங்கள் ஆனாலும் காதலர்கள் ஒவ்வொருவரும் தூக்கிக் கொண்டாடும் படமாக ஒரு தனித்துவமான உணர்வை ஏற்படுத்தி விட்டது. “காதலெனும் சொல்லை நானும் சொல்லவில்லை, சொல்ல வந்த நேரம் காதல் எந்தன் கையில் இல்லை” ஆஹா எவ்வளவு ஒரு அருமையான வரி. காதல் தோல்வியையும், பாதியில் நின்ற கல்யாணத்தையும், ஒரு தந்தையின் அன்பை ஒன்று சேர்க்கும் படமாக அமைந்திருக்கிறது.

விண்ணைத்தாண்டி வருவாயா: கௌதம் மேனன் இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு சிம்பு மற்றும் த்ரிஷா நடிப்பில் விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம் வெளிவந்தது. காதல் வெற்றி, தோல்வி என்பது எல்லா காலத்திலேயும் ஒன்னு தான் என்பதற்கு ஏற்ப இப்படத்தின் கதை அமைந்திருக்கும். உருகி உருகி காதலித்தாலும் கடைசியில் பெற்றோர்களின் நிர்பந்தத்தால் காதலை உதறித் தள்ளிவிட்டு ஒரு சோகமான சுகமான உணர்வை ஏற்படுத்தி கொடுத்திருக்கும்.

ஜில்லுனு ஒரு காதல்: என் கிருஷ்ணா இயக்கத்தில் 2006 ஆம் ஆண்டு சூர்யா, ஜோதிகா நடிப்பில் ஜில்லுனு ஒரு காதல் திரைப்படம் வெளிவந்தது. காதலிக்கும் பொழுது எந்த பிரச்சினை வந்தாலும் அதை எதிர்த்து காதலில் ஒன்று சேர வேண்டும் என்று போராடும் ஒரு கதையாகவும், சில சூழ்நிலையால் காதலி விட்டுப் பிரிந்து போய் வேறொரு கல்யாணம் பண்ணினாலும் அதிலும் காதல் உணர்வை ஏற்படுத்தி இருக்கும். இதுதான் தற்போது முக்கால்வாசி பேரின் நிலைமையாக கூட இருக்கும்.

Also read: விஷால் எடுத்த விபரீத முடிவு! விஜய்யை வைத்து செஞ்ச பின்புதான் அரசியலா?

Trending News