வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

சிகரெட் பிடிப்பதில் ரஜினியை மிஞ்சிய 5 ஹீரோயின்கள்.. போட்டோவுடன் சிக்கிய நயன்

Tamil Heroines: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆரம்ப காலத்தில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது அவருடைய சிகரெட் பிடிக்கும் பழக்கத்தால் தான். அவர் சிகரட்டை தூக்கி போட்டு ஸ்டைலாக பிடிப்பதுதான் அவரை மக்களிடையே கொண்டு சேர்த்தது. நிஜ வாழ்க்கையில் ரஜினியை மிஞ்சும் அளவுக்கு இந்த ஆறு ஹீரோயின்கள் புகை பிடிக்கும் பழக்கம் கொண்டவர்களாக இருக்கிறார்கள் அவர்கள் யார் என்று பார்க்கலாம்.

நயன்தாரா: நடிகை நயன்தாரா செயின் ஸ்மோக்கர் ஆக ஆரம்ப காலகட்டத்தில் இருந்ததாக சொல்லப்படுகிறது. தற்போது அந்த பழக்கத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விடுபட்டு விட்டாராம். மும்பையில் ஒரு பார்ட்டியில் அவர் புகைபிடிப்பது போல் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பயங்கரமாக வைரல் ஆக்கப்பட்டது.

ஹன்சிகா: தமிழ் சினிமா ரசிகர்களால் குட்டி குஷ்பூ என்று அன்போடு அழைக்கப்பட்டவர் தான் ஹன்சிகா மோத்வானி. இவர் ஒரு பப்பில் புகை பிடித்துக் கொண்டிருப்பது போல் எடுக்கப்பட்ட புகைப்படம் 2011 ஆம் ஆண்டு வெளியாகி, சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகியது.

Also Read:ரஜினிக்கு ஓப்பனிங் சாங் வைத்த முதல் படம்.. இருந்த கெட்ட பெயர் மொத்தத்தையும் அழித்துக் காட்டிய தலைவர்

த்ரிஷா: தமிழ் சினிமாவில் 20 வருடங்களுக்கும் மேலாக கதாநாயகியாக நிலைத்து நிற்பவர் த்ரிஷா. அதற்கு முக்கிய காரணம் அவருடைய இளமையும், அழகும் தான். உடலை பராமரிக்கும் த்ரிஷா புகை பிடிக்கும் பழக்கத்தையும் வைத்திருக்கிறார். 2019 ஆம் ஆண்டு பொதுவெளியில் இவர் புகைபிடித்த புகைப்படம் வெளியானது.

அமலா பால்: சர்ச்சையான படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் தான் அமலா பால். இவருக்கு புகை பிடிக்கும் பழக்கமும், மது குடிக்கும் பழக்கமும் இருக்கிறது. அமலாபால் அவ்வப்போது அவர் கைகளில் சிகரெட்டுடன் இருக்கும் போட்டோ எடுத்து சமூக வலைத்தளத்திலும் பகிர்ந்திருக்கிறார்.

ஆண்ட்ரியா: பாடகி மற்றும் நடிகை என பன்முக திறமை கொண்டவர் தான் ஆண்ட்ரியா. இவருக்கு புகைபிடிக்கும் பழக்கம் அதிகமாகவே இருந்திருக்கிறது. பின்னர் சில சொந்த காரணங்களால் புகை பிடிப்பதை படிப்படியாக நிறுத்திக் கொண்டு வருகிறார்.

Also Read:ரஜினியவே யோசிச்ச சன் பிக்சர்ஸ்.. லோகேஷை சும்மாவா விடுவாங்க?.

Trending News