செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

அனிருத் காதல் வலையில் சிக்காமல் தப்பித்த 6 நடிகைகள்.. தம்பி உன் கேரக்டர் சரி இல்ல, மகளை உஷார் படுத்திய பிரபலம்

ஆல் ஸ்டேடிலும் அய்யா கில்லி மாதிரி என ரவுண்ட் கட்டிக் கொண்டிருக்கும் இளம் இயக்குனர் அனிருத் இசையமைக்கும் பாடல்கள் எல்லாம் சூப்பர் ஹிட் தான். இதனால் தற்போது டாப் ஹீரோக்களின் படங்களில் எல்லாம் அனிருத் தான் இசையமைத்துக் கொண்டிருக்கிறார். இவ்வளவு திறமை வாய்ந்த அனிருத் பக்கா பிளேபாய். பார்ப்பதற்கு சிறு குழந்தை போல் இருக்கும் இவரின் திரை மறைவு லீலைகள் சொல்லி மாளாது. இவருடன் நிறைய நடிகைகள் கிசுகிசுக்கப்பட்டாலும், அவருடைய காதல் வலையில் இருந்து எஸ்கேப் ஆன 6 நடிகைகளை பற்றி பார்ப்போம்.

ஆண்ட்ரியா: மிகக் குறுகிய காலத்திலேயே அஜித், விஜய், ரஜினியுடன் இணைந்து நடித்த ஆண்ட்ரியா இசையமைப்பாளர் அனிருத்துடன் சில சர்ச்சைகளில் சிக்கினார். அதிலும் இவர்கள் இருவரும் நெருக்கமாக எடுத்துக் கொண்ட புகைப்படம் வெளியாகி பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. ஆனால் அப்போது அனிருத்துக்கு வெறும் 19 வயது தான். ஆனால் ஆண்ட்ரியாவிற்கு 25 வயது. இதனாலேயே இவர்களது காதல் தோல்வியில் முடிந்ததாக சொல்லப்படுகிறது.

விஜே திவ்யதர்ஷினி: விஜய் டிவி கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக பணிபுரிந்து வந்த டிடி என்கின்ற விஜே திவ்யதர்ஷினி சினிமாவிலும் சின்ன சின்ன வேடங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதன் பின் இவர் நீண்ட கால நண்பரை காதலித்து திருமணம் செய்து கொண்டு, அதன்பின் வெகு சீக்கிரமே கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று விட்டார். பின்பு இவர் அனிருத்துடன் நெருக்கமாக இருந்த புகைப்படம் வெளியாகி சோசியல் மீடியாவில் கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் இருவருக்கும் வயது வித்தியாசம் அதிகமாக இருப்பதால் பல கேலி கிண்டல் எழும் என்பதற்காகவே பிரிந்துவிட்டனர். தற்போது டிடி பிரபல தொழிலதிபரை இரண்டாம் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் சமீபத்திய தகவல் வெளியானது.

Also Read: அனிருத்தை தூக்கி வைத்துக் கொண்டாடும் தமிழ் சினிமா.. ஓரம் கட்டப்பட்ட யுவன்

கீர்த்தி சுரேஷ்: தென்னிந்திய முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் உடன் அனிருத் நெருங்கி பழகினார். இவர்கள் இருவரும் ஜோடியாக பல்வேறு இடத்திற்கு சுற்றி வந்துள்ளார்கள். அதுமட்டுமின்றி இரவு பார்ட்டிகளில் கலந்துகொண்டு இந்த ஜோடி ஒன்றாகவே காரில் சென்று வருவார்கள். இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என பல வதந்திகள் கிளம்பியது. அதுமட்டுமின்றி அனிருத் ஒல்லியாக இருக்கிறார் என்பதற்காகவே கீர்த்தி சுரேஷ் உடற்பயிற்சி செய்து ஸ்லிம்மாக மாறினார்.

இவர்களது திருமணத்தை குறித்து குடும்பத்தினரிடம் சம்மதம் கேட்டபோது அனிருத் பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கடைசியில் பெற்றோர் பார்த்த பெண்ணை தான் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என்று அனிருத் சொன்னதும் கீர்த்தி சுரேஷ்க்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது மட்டுமின்றி, அவரும் சிறுவயதில் இருந்து தன்னை ஒருதலையாக காதலித்துக் கொண்டிருந்த கேரளாவை சேர்ந்த நண்பரை பெற்றோரின் விருப்பத்துடன் திருமணம் செய்து கொள்ளும் முடிவுக்கு வந்திருக்கிறார்.

பிரியா ஆனந்த்: விஜய்யின் லியோ படத்தில் தற்போது கமிட்டாக இருக்கும் பிரியா ஆனந்த், வணக்கம் சென்னை என்ற திரைப்படத்தில் நடிக்கும் போது அனிருத்துடன் நெருக்கமாக பழகி வந்தார். இவர்கள் இருவரும் காதலர்கள் என சொல்லப்பட்ட நிலையில், அனிருத் ஒரு பிளேபாய் என்பதை பிரியா ஆனந்த் அவருடன் பழகிய சில நாட்களிலேயே தெரிந்து கொண்டார். அதன்பின் உஷாரான பிரியா ஆனந்த் அனிருத்தின் காதல் வலையில் சிக்காமல் எஸ்கேப் ஆகிவிட்டார்

Also Read: ஆல் ஸ்டேட்ல அய்யா கில்லி மாதிரி.. அடுத்தடுத்து பட்டையை கிளப்பும் அனிருத்தின் 5 படங்கள்

எமி ஜாக்சன்: இங்கிலாந்தை சேர்ந்த எமி ஜாக்சன் மதராசபட்டினத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதன் பின் இவர் தனுஷ் உடன் தங்க மகன் ரஜினியின் 2.0 போன்ற படத்தில் இணைந்து இணைந்து நடித்திருந்தார். அதிலும் 2015 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான தங்க மகன் திரைப்படத்திற்கு இசையமைத்தது அனிருத் தான்.

அந்த சமயத்தில் எமி ஜாக்சன் அனிருத்துடன் கிசுகிசுக்கப்பட்டார். இருவரது புகைப்படமும் சோசியல் மீடியாவில் வெளியானது. இருப்பினும் அனிருத் உடன் டேட்டிங் செய்த எமி ஜாக்சன், பல நடிகைகளுடன் சகஜமாக பழகி கழட்டி விடுபவர் தான் அனிருத் என்பதை தெரிந்ததும் அவருடைய காதல் வலையிலிருந்து தப்பித்து விட்டார். அதன் பின் எமி ஜாக்சன் காதல் திருமணம் செய்து கொண்டு சினிமாவிற்கு முழுக்கு போட்டு விட்டார்.

சுருதிஹாசன்: உலக நாயகன் கமலஹாசனின் மூத்த மகனான ஸ்ருதிஹாசன் அனிருத்துடன் நிறைய படங்களில் இணைந்து பணியாற்றியதால் இவர்களுக்கு இடையே காதல் ஏற்பட்டு இருக்கிறது. இதை உறுதிப்படுத்தும் விதமாக கண் கூசும் இவர்களது புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாக பரவியது. அதன் பின் அனிருத் ஒரு பிளேபாய் என தெரிந்ததும் அவருடைய காதல் வழியில் சிக்காமல் சிட்டாய் பறந்து விட்டார்.

Also Read: அனிருத் வலையில் சிக்கிய 5 நடிகைகள்.. 45 வயது ஆன்ட்டியிடம் செய்த லீலை

இந்த 6 நடிகைகள் மட்டுமல்ல அனிருத்தின் மாமாவான ரஜினிகாந்தின் மகள்கள் இருவருக்கும் பிராக்கெட் போட நினைத்தார். ஆனால் தம்பி கேரக்டர் சரியில்லை என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய மகள்களிடம், அந்தப் பையனை சேர்த்துக் கொள்ளாதீர்கள் என்று அறிவுரை வழங்கியுள்ளார்.

Trending News