செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

100 கோடி பட்ஜெட்க்கு மேல் உருவாகும் 6 படங்கள்.. எட்ட முடியாத உயரத்தில் பொன்னியின் செல்வன்

தற்போதைய தமிழ் சினிமாவில் வெளிவரும் படங்கள் அனைத்தும் ஹாலிவுட் தரத்திற்கு நிகராக இருக்கிறது. அந்த வகையில் தயாரிப்பாளர்கள் படத்தின் பட்ஜெட்டை பற்றி கவலைப்படாமல் தாராளமாக செலவு செய்து வருகின்றனர். இப்படி பிரம்மாண்டமாக வெளியாகும் திரைப்படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

அதன் காரணமாக தற்போது 100 கோடிக்கும் மேல் மெகா பட்ஜெட்டில் பல திரைப்படங்கள் உருவாகிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் பல கோடி செலவு செய்து மிகப்பிரமாண்டமாக எடுக்கப்படும் ஆறு திரைப்படங்கள் பற்றி இங்கு காண்போம்.

பொன்னியின் செல்வன்: ஒட்டுமொத்த திரையுலகமும் மிகவும் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இந்த படம் வரும் செப்டம்பர் மாதம் வெளியாக இருக்கிறது. மணிரத்னம் இயக்கத்தில் ஏ ஆர் ரகுமான் இசையில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளங்கள் இதில் நடித்துள்ளனர்.

கிட்டத்தட்ட 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வரும் இந்த வரலாற்று காவியம் இந்திய திரையுலகையே திரும்பிப் பார்க்க வைக்கும் அளவுக்கு எடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழில் அதிக பொருள் செலவில் உருவான திரைப்படம் என்ற பெருமையும் பொன்னியின் செல்வனுக்கு உண்டு.

இந்தியன் 2: பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், ப்ரியா பவானி சங்கர், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்து வருகின்றனர். மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த திரைப்படம் சில பிரச்சனைகளின் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

தற்போது அந்த பிரச்சனைகள் அனைத்தும் சமூகமாக முடிந்திருக்கும் நிலையில் மீண்டும் இப்படம் ஆரம்பிக்கப்பட இருக்கிறது. அந்த வகையில் இப்படத்தின் பட்ஜெட் 200 கோடி ரூபாயாக இருக்கிறது.

கோப்ரா: அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி, இர்ஃபான் பதான் ஆகியோர் நடித்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. வழக்கமாக விக்ரம் நடிக்கும் திரைப்படங்களில் ஏகப்பட்ட கெட்டப்புகள் போட்டு அசத்தி விடுவார்.

அந்த வகையில் அவர் இந்த திரைப்படத்திற்காகவும் பல்வேறு விதமான கெட்டப்புகளை போட்டு இருக்கிறார். இதுவே ரசிகர்களுக்கு படத்தை காணும் ஆவலை அதிகப்படுத்தியுள்ளது. விரைவில் வெளியாக இருக்கும் இந்த திரைப்படம் 110 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ளது.

ஜெயிலர்: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் இந்த திரைப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். அண்ணாத்த திரைப்படத்திற்கு பிறகு சூப்பர் ஸ்டார் மீண்டும் சன் பிக்சர்ஸ் உடன் இணைந்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.

சமீபத்தில் வெளியான இப்படத்தின் டைட்டில் அறிவிப்பே நல்ல வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து விரைவில் ஆரம்பிக்கப்பட இருக்கும் இந்த படத்தின் பட்ஜெட் 120 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

வாரிசு: வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகும் வாரிசு திரைப்படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். விஜய்யுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, சரத்குமார் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இதில் நடித்து வருகின்றனர். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. அந்த வகையில் இந்த படத்தின் பட்ஜெட் 100 கோடி ரூபாய் ஆகும்.

ஏகே 61: வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துக் கொண்டிருக்கும் இந்த திரைப்படத்தை போனி கபூர் தயாரித்து வருகிறார். மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி கொண்டிருக்கும் இந்த படம் 150 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் வலிமை திரைப்படத்தை விட இந்த படத்தை அஜித்தின் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.

Trending News