சனிக்கிழமை, நவம்பர் 23, 2024

300 கோடியை தாண்டி வசூல் செய்த 6 படங்கள்.. ஆறே நாட்களில் சாதனையை முறியடித்த பொன்னின் செல்வன்

சினிமாவைப் பொறுத்தவரையில் ஒரு நல்ல படத்தை மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற பொறுப்பு இருந்தாலும் அதில் லாபம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும். வியாபார ரீதியாகவும் சினிமா செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழ் சினிமாவில் தற்போது வரை 300 கோடி தாண்டி வசூல் செய்த 6 படங்களை இப்போது பார்க்கலாம்.

எந்திரன் : ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, ஐஸ்வர்யா ராய் மற்றும் பலர் நடிப்பில் 2010 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் எந்திரன். இந்தப் படம் 132 கோடி முதல் 166 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. உலகம் முழுவதும் 300 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.

Also Read :பயங்கர உற்சாகத்தில் இருக்கும் ரஜினி.. சந்தோஷத்தில் கொடுக்கப் போகும் அடுத்தடுத்த அறிவிப்பு

கபாலி : பா ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி, தன்ஷிகா, ராதிகா ஆப்தே ஆகியோர் நடிப்பில் 2016 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கபாலி. இப்படம் 100 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருந்தது. ஆனால் வசூல் மட்டும் 625 கோடி முதல் 650 கோடி வரை வசூல் வேட்டையாடியது

2.o : எந்திரன் படத்தின் தொடர்ச்சியாக ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்ஷய்குமார், எமி ஜாக்சன் ஆகியோர் நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 2.o. இப்படம் கிட்டத்தட்ட 500 கோடி முதல் 600 கோடி பட்ஜெட்டில் லைக்கா தயாரித்திருந்தது. மேலும் உலகம் முழுவதும் 800 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.

Also Read :தனுஷ், ஐஸ்வர்யா ரஜினி வீட்டில் நடந்த திடீர் சந்திப்பு.. விவாகரத்து முடிவுக்கு முற்றுப்புள்ளியா?

பிகில் : அட்லி இயக்கத்தில் விஜய், நயன்தாரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து 2019 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பிகில் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. பிகில் படம் 180 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு 300 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.

விக்ரம் : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமலஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோர் நடிப்பில் 2022 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் விக்ரம். இப்படம் 150 பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட உலகம் முழுவதும் 442 கோடி வசூல் வேட்டையாடியது.

பொன்னியின் செல்வன் : மணிரத்தினம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கும் படம் பொன்னியின் செல்வன். இந்த படத்தின் இரண்டு பாகங்களும் 500 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. ஆனால் இப்படம் வெளியாகி 6 நாட்களில் 300 கோடி வசூல் செய்துள்ளது.

Also Read :4 நாட்களில் இவ்வளவு கோடி வசூலா.. பொன்னியின் செல்வன் ஹாட்ரிக் வெற்றி

- Advertisement -spot_img

Trending News