2022 ஆம் ஆண்டு பொன்னியின் செல்வன், கேஜிஎஃப் 2 போன்ற பெரிய பட்ஜெட் படங்கள் வெளிவந்து வெற்றியை தட்டி சென்றாலும் இந்தப் படங்களுக்கு நிகராக ரசிகர்களின் மனதை கவர்ந்த குறைந்த பட்ஜெட் படங்களும் வெளிவந்தது. அந்த வகையில் இந்த வருடம் குறைந்த பட்ஜெட்டில் பிரம்மாண்ட வசூல் சாதனை படைத்த 6 படங்களின் லிஸ்ட் இணையத்தில் வெளியாகி கலக்கிக் கொண்டிருக்கிறது. இதில் ஆல் ரவுண்டராக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் மாஸ் காட்டியுள்ளார்.
லவ் டுடே: இந்த ஆண்டு வெளிவந்த திரைபடங்களிலேயே மிக குறைந்த பட்ஜெட்டில் வெளியாகி மாபெரும் வசூல் சாதனை படைத்த படங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய இளைஞர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி படமாகும். கோமாளி படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனராக இருந்த பிரதீப் ரங்கநாதன் லவ் டுடே படத்தின் மூலம் நடிகராகவும் அவதாரம் எடுத்து மாஸ் ஹீரோக்களுக்கு மத்தியில் தன்னை நிலை நிறுத்திக் கொண்டுள்ளார்.
5கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் 70 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்துள்ளது. படத்தில் பிரதீப் ரங்கநாதன் தனுஷ் சாயலில் இருப்பதால் அவரை ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். குறைந்த பட்ஜெட் வெற்றி படங்களின் லிஸ்டில் லவ் டுடே 6-ம் இடத்தை பிடித்துள்ளது.
Also Read: 2022-ல் சிறந்த டாப் 5 ஹீரோஸ்.. பாக்ஸ் ஆபிஸை அடித்து நொறுக்கிய ஏஜென்ட் விக்ரம்
சர்தார்: இயக்குனர் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி இரு வேடங்களில் நடித்திருக்கும் சர்தார் இந்த ஆண்டு வெளியான திரில்லர் மற்றும் அதிரடி கலந்த திரைப்படம் ஆகும். பிரின்ஸ் பிக்சர்ஸ் சர்தார் படத்தை தயாரித்தது. 40 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்து வெற்றி பெற்றது. ஆகையால் இந்த ஆண்டு கம்மி பட்ஜெட்டில் அதிக லாபம் பார்த்த படங்களில் லிஸ்டில் 5-ம் இடத்தை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
திருச்சிற்றம்பலம்: இயக்குநர் மித்ரன் ஜவஹர், உத்தமபுத்திரன் படத்தையடுத்து ஏறக்குறைய 10 ஆண்டுகளுக்குப் பிறகு தனுஷூடன் கூட்டணி அமைத்துள்ளார். 30 கோடி பட்ஜெட்டில் உருவான திருச்சிற்றம்பலம் திரைப்படம் உலகளவில் 110 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 80 கோடி ரூபாய் வசூலித்து தனுஷின் கேரியரில் வசூல் சாதனை படைத்த திரைப்படமாக உருமாறியுள்ளது. ஆகையால் அதிக லாபம் பார்த்த லோ பட்ஜெட் படங்களின் லிஸ்டில் திருச்சிற்றம்பலம் 4-ம் இடத்தில் உள்ளது.
டான்: இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் நடிப்பில் வெளியான திரைப்படம் இந்தப் படம் இந்த ஆண்டில் வெளிவந்த நகைச்சுவை கலந்த திரில்லர் திரைப்படம் ஆகும். லைக்கா நிறுவனம் டான் படத்தை தயாரித்துள்ளது. 50 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் பாக்ஸ் ஆபிஸில் 117 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்துள்ளது 3-ம் இடத்தை பிடித்துள்ளது.
த்ரிஷ்யம் 2: மலையாளத் திரைப்படமான திரிஷ்யம் படத்தின் முதல் பாகத்தை தொடர்ந்து இரண்டாம் பாகம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. தமிழில் பாபநாசம் என்ற பெயரில் கமலஹாசன் நடிப்பில் வெளியானது. 50 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்து 2-ம் இடத்தை பிடித்துள்ளது.
காந்தாரா: கன்னட மொழியில் வெளியாகி காந்தாரா திரைப்படம் தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் கவனத்தை ஈர்த்து நிலைத்து நிற்கிறது. நடிகர் ரிஷப் ஷெட்டி இப்படத்தை இயக்கி நடித்து இருக்கிறார். காந்தாரா திரைப்படம் கேஜிஎஃப் 2 திரைப்படத்திற்கு அடுத்து உலக அளவில் வசூல் சாதனை படைத்துள்ளது கன்னட படம் ஆகும். 16 கோடி பட்ஜெட் கொண்ட இப்படம் 400 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்து முதலிடத்தில் உள்ளது.
இவ்வாறு இந்த 6 படங்களும் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வசூல் ரீதியாக மாபெரும் வெற்றி பெற்று பாக்ஸ் ஆபிஸை மிரள விட்டது. அதிலும் லவ் டுடே படத்தின் இயக்குனரும் நடிகனான பிரதிப் ரங்கநாதன், ஆல் ரவுண்டராக கலக்கிறார்.