செவ்வாய்க்கிழமை, நவம்பர் 26, 2024

கிளைமாக்சில் இறந்து வெற்றி கண்ட 6 படங்கள்.. நம்பிக்கை துரோகத்தை மறக்க முடியாத சுப்பிரமணியபுரம்

Climax twist Movies: கிளைமாக்ஸ் காட்சியில் நடிகர் அல்லது நடிகைகள் இறந்து போய் வெற்றி கண்ட படங்களின் வரிசைகளை தற்போது பார்க்கலாம். பேஷன்ட் டெத் ஆபரேஷன் சக்சஸ் என்பது போன்ற படங்கள் தத்ரூபமாக மக்கள் மனதில் இடம் பிடித்து வெற்றி பெறும். அந்த அளவிற்கு கதைக்களம் அமைக்கப்பட்டு தியேட்டரில் சீட்டின் நுனி அளவுக்கு சென்று கிளைமாக்ஸ் காட்சிகளை முடிப்பார்கள்.

நாயகன்: மணிரத்தினம் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் கூட்டணியில் வெளிவந்த முதல் படம் தான் நாயகன். சரண்யா இத்திரைப்படத்தில் தான் கதாநாயகியாக அறிமுகமானார், உலகளவில் எப்போதும் சிறந்த படங்களில் பட்டியலில் ஒன்று நாயகன். இந்த திரைப்படத்தில் கதாநாயகியும் கதாநாயகனும் இருவருமே இறந்து போவார்கள், இன்றுவரை ரசிகர்களால் மறக்க முடியாத திரைப்படங்களில் இதுவும் ஒன்று.

Also Read: அட்லீயை பழிவாங்க வெங்கட் பிரபுவை பகடையாக்கிய ஏ.ஜி.எஸ்.. பல்லை கடிச்சிக்கிட்டு பொறுத்துப்போகும் தளபதி

ரமணா: ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜயகாந்த், சிம்ரன் நடித்து சூப்பர் ஹிட் ஆன படம் ரமணா. இந்த படத்தில் ஆசிரியராக மாணவர்களை லஞ்சத்தை ஒழிப்பதற்காக விஜயகாந்த் ஒரு படையை திரட்டி மரண பயத்தை காட்டுவார். அப்படி லஞ்சத்தை பற்றி அடித்தட்டு மக்கள் வர புரிய வைத்த படம். இந்த படத்தின் இறுதி காட்சியில் விஜயகாந்த் தானாகவே முன்வந்து மரண தண்டனையை ஏற்றுக் கொள்வார்.

சுப்பிரமணியபுரம்: சசிகுமார் இயக்கத்தில் 2008 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் சுப்ரமணியபுரம். இதில் ஜெய், சசிகுமார், சுவாதி, கஞ்சா கருப்பு, சமுத்திரக்கனி போன்றோர் நடித்திருப்பார்கள். இத்திரைப்படத்தில் நட்பின் முக்கியத்துவத்தையும், காதல் மற்றும் துரோகத்தையும் வெளிக்கொண்டு வந்திருப்பார்கள். குறிப்பாக காதலியே காதலனை கொல்ல துணையாய் இருப்பது போல் கொடூர கிளைமாக்ஸை கொண்டிருப்பது இந்த சுப்ரமணியபுரம். அந்த துரோகத்தை இன்று வரை யாராலும் மறக்க முடியாது.

Also Read:சுதா கொங்காரா, ஏஆர் முருகதாஸுக்கு டிமிக்கி கொடுத்த சஞ்சய்.. தாத்தா சப்போர்ட்டில் முளைத்திருக்கும் தளபதியின் வாரிசு

மைனா: பிரபு சாலமன் இயக்கத்தில் 2010ல் வெளியான திரைப்படம் மைனா.
இந்த திரைப்படத்தில் காதல் காட்சிகள் அழகாக இருக்கும். இதில் விதார்த் கதாநாயகனாகவும், அமலாபால் கதாநாயகி ஆகவும் நடித்துள்ளார்கள். இருவருக்கிடையே உள்ள காதல் காட்சிகளை அழகாகவும் எளிமையாகவும் வெளிப்படுத்தி இருப்பார்கள். இந்தத் திரைப்படத்தின் கிளைமாக்ஸில் கதாநாயகி இறந்து விடுவார். இப்படத்தை பார்க்கும் அனைவரின் நெஞ்சை உருக்கும் அளவிற்கு அமைந்திருக்கும் கிளைமாக்ஸ்.

எங்கேயும் எப்போதும்: இவற்றுள் எங்கேயும் எப்போதும் என்ற திரைப்படமும் இடம்பெறும். எம் சரவணன் இயக்கத்தில் 2011 இல் இந்த திரைப்படம் வெளியானது. இத்திரைப்படத்தில் இரண்டு ஜோடி இருப்பார்கள். அதில் ஜெய் மற்றும் அஞ்சலி ஜோடியாகவும், ஷர்வானந்து மற்றும் அனன்யா ஜோடியாகவும் நடித்திருப்பார்கள். திரைப்படத்தின் கிளைமாக்ஸ்சில் இவ்விரு ஜோடிகளில் ஜெய் இறந்து விடுவார். இருந்தாலும் இத்திரைப்படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.

Also Read:மேக்கப் இல்லாமல் வந்த நடிகை, சுற்றிவளைத்த கேமரா.. எடுத்தேன் பாரு ஓட்டம், உச்சகட்ட அவமானத்தை சந்தித்த அமுல் பேபி

பருத்திவீரன்: அமீர் இயக்கத்தில் 2007 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் பருத்திவீரன். இதில் கார்த்தி ஹீரோவாகவும், பிரியாமணி ஹீரோயின் ஆகவும் நடித்திருப்பார்கள். இத்திரைப்படம் காதல் மற்றும் ஆக்சனை மையமாகக் கொண்டிருக்கும். இந்த திரைப்படத்தின் கிளைமாக்ஸ் சீனில் கதாநாயகி இறந்து விடுவார். சில மனித மிருகங்களின் கொடூர செயலால் கதாநாயகி இறந்து விடுவார். இன்று வரை இத்திரைப்படத்தின் கிளைமாக்ஸ் ரசிகர்களால் மறக்க முடியாத அளவிற்கு உண்டாக் உண்டாக்கி இருக்கும்.

- Advertisement -spot_img

Trending News