ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

அடுத்தடுத்து ரிலீசுக்கு காத்திருக்கும் 6 பெரிய படங்கள்.. உலகநாயகனுடன் மோதும் சூர்யா

Upcoming Tamil Movies: தமிழ் சினிமாவில் எப்போதாவது மிகப்பெரிய எதிர்பார்ப்பை கிளப்பும் பெரிய படங்கள் ரிலீஸ் ஆவது உண்டு. ஆனால் இந்த வருடத்தின் கடைசியில் ரிலீஸ் ஆக இருக்கும் அத்தனை படங்களுமே மிகப்பெரிய படங்களாக அமைந்திருக்கின்றன. இந்த வருடம் அக்டோபர் மாதம் தொடங்கி ஏப்ரல் மாதம் வரை பெரிய ஹீரோக்கள், பெரிய பட்ஜெட் என இந்த ஆறு படங்கள் களம் இறங்குகிறது.

லியோ: தற்போதைக்கு தமிழ் சினிமா ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் படம் லியோ. இந்த படம் வரும் அக்டோபர் மாதம் ரிலீஸ் ஆகிறது. தளபதி விஜய் என்ற மிகப்பெரிய ஹைப்பைத் தாண்டி சமீபத்தில் வெளியான கிளிம்ஸ் வீடியோக்களால் சஞ்சய் தத், அர்ஜுன் என படத்தின் மற்ற கதாபாத்திரங்களின் மீதும் தற்போது அதிகமான எதிர்பார்ப்புகள் அமைந்திருக்கிறது.

Also Read:பிக் பாஸால் முடிவுக்கு வரும் விஜய் டிவி சீரியல்கள்.. டிஆர்பியை ஏற்ற போட்ட பக்கா பிளான்

அயலான்: நடிகர் சிவகார்த்திகேயனுக்கு சமீபத்திய ரிலீஸ் ஆன மாவீரன் மிகப்பெரிய வெற்றியை கொடுத்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து சிவா நடித்து, இயக்குனர் ரவிக்குமார் இயக்கிய அயலான் படம் அடுத்து ரிலீசுக்கு காத்திருக்கிறது. இந்த படம் தீபாவளி கொண்டாட்டமாக வரும் நவம்பர் மாதம் வெளியாகும். வேற்று கிரகவாசி மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட சயின்ஸ் பிக்சன் படம் இது.

கேப்டன் மில்லர்: நடிகர் தனுஷ் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை கிளப்பி இருக்கும் படம் கேப்டன் மில்லர். இந்த படத்தை இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார். படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கேப்டன் மில்லர் படம் வரும் டிசம்பர் மாதம் ரிலீஸ் ஆக இருக்கிறது.

தங்கலான்: இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடித்துக் கொண்டிருக்கும் படம் தங்கலான். இந்த படம் சுதந்திரத்திற்கு முன்பான இந்தியாவின் தங்கச் சுரங்கத்தில் வேலை செய்தவர்களின் உண்மை கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்படுகிறது. படத்தின் படத்தின் படபிடிப்பு வேலைகள் பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த படம் வரும் மே மாதம் ரிலீஸ் ஆக இருக்கிறது.

Also Read:ஒன்னு இல்ல ரெண்டு வீடா, டபுள் ட்ரீட் கொடுத்த கமல்.. சம்பவத்துக்கு தயாராகும் பிக் பாஸ் 7 ப்ரோமோ

கங்குவா: இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் கங்குவா. இந்த படம் 2D மற்றும் 3D தொழில்நுட்பத்தில் உருவாகி வருகிறது. மேலும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பான் இந்தியா மூவியாக ரிலீஸ் ஆக இருக்கிறது. அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டிருக்கும் இந்த படம் உலகநாயகன் கமலஹாசன் நடித்த இந்தியன் 2 படத்துடன் மோதும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியன் 2: உலக நாயகன் கமலஹாசன் மற்றும் இயக்குனர் சங்கர் கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவாகிக் கொண்டிருக்கும் படம் இந்தியன் 2. படப்பிடிப்பு வேலைகள் மொத்தமும் முடிந்த நிலையில் தற்போது தொழில்நுட்ப வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Also Read:எதிர்பார்த்த 3 படங்களுமே மண்ணை கவ்வியது.. உங்களுக்கெல்லாம் நோ தேசிய விருது என சாத்தப்பட்ட சட்டர்

Trending News