Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

ஜூன் மாதம் வெளியாகும் 8 படங்கள்.. விட்டதை பிடிப்பாரா தக் லைஃப் கமல்

ஜூன் மாதம் வெளியாகும் 8 படங்கள்.. விட்டதை பிடிப்பாரா தக் லைஃப் கமல்

Kamal : மே மாதம் சூர்யாவின் ரெட்ரோ, சசிகுமாரின் டூரிஸ்ட் ஃபேமிலி, சூரியன் மாமன், விஜய் சேதுபதியின் ஏஸ் படங்கள் வெளியானது. இந்த படங்கள் எல்லாமே ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக டூரிஸ்ட் ஃபேமிலி படத்திற்கு பாராட்டுக்கள் […]

Kamal : மே மாதம் சூர்யாவின் ரெட்ரோ, சசிகுமாரின் டூரிஸ்ட் ஃபேமிலி, சூரியன் மாமன், விஜய் சேதுபதியின் ஏஸ் படங்கள் வெளியானது. இந்த படங்கள் எல்லாமே ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக டூரிஸ்ட் ஃபேமிலி படத்திற்கு பாராட்டுக்கள் குவிந்தது.

இந்த மாதமும் பெரிய எதிர்பார்ப்புடன் நிறைய படங்கள் வெளியாக இருக்கிறது. அந்த வகையில் ஜூன் முதல் வாரமே கமலின் தக் லைஃப் படம் வெளியாகிறது. மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் கமல், சிம்பு, திரிஷா, அபிராமி ஆகியோர் நடித்துள்ளனர்.

ஜூன் 5-ம் தேதி இந்த படம் தியேட்டரில் வெளியாகிறது. அடுத்ததாக ஜூன் 20 ஆம் தேதி தனுஷின் குபேரா படம் வெளியாக இருக்கிறது. தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகியுள்ள படத்தில் ராஸ்மிகா மந்தனா, நாகர்ஜுனா போன்றோர் நடித்திருக்கின்றனர்.

ஜூன் மாதம் வெளியாகும் 8 படங்கள்

விஜய் ஆண்டனி, சமுத்திரகனி மற்றும் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் மார்கன் படம் ஜூன் 27 வெளியாக உள்ளது. திரில்லரான இந்த படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி படத்தை பார்க்கும் ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகி இருக்கும் ஹரிஹர வீர மல்லு படம் ஜூன் 12 வெளியாகிறது. மேலும் பிரபாஸ், அக்ஷய்குமார் மற்றும் மோகன்லால் ஆகியோர் நடிப்பில் கண்ணப்பா படம் உருவாகி இருக்கிறது. இந்த படம் ஜூன் 27 தியேட்டரில் வெளியாக உள்ளது.

பாலிவுட்டில் அக்ஷய்குமார் நடிப்பில் உருவான ஹவுஸ்புல் 5 படம் ஜூன் 5 வெளியாகிறது. அமீர்கானின் சிதாரே ஜமீன் பார் படம் ஜூன் 20 ரிலீஸ் ஆக உள்ளது. மேலும் கஜோல் நடிப்பில் மா படம் ஜூன் 27 திரைக்க வர இருக்கிறது.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.