தமிழ் சினிமாவில் நடிப்பில் வித்தியாசம் காமிப்பதில் விக்ரம், சூர்யாவிற்கு பெரும் பங்கு உண்டு. விக்ரம் தன் படத்தின் கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு தன்னை மாற்றி கொள்வார் என்பது மறுக்க முடியாத உண்மைதான். விக்ரம் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற பல மொழிகளில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி தமிழ் சினிமாவில் பல வெற்றிகளை பார்த்த விக்ரம் தற்போது தோல்விகளை சந்தித்து வருகிறார். ஷங்கரின் இயக்கத்தில் வெளிவந்த அந்நியன் படத்திற்கு பின் வெற்றிப்படம் என்று எதுவுமே அமையவில்லையாம்.
அதாவது அவருக்கு தமிழ் சினிமாவில் சறுக்கல் ஏற்படுத்திய படம் எது என்று பார்த்தால் லிங்குசாமி இயக்கத்தில் வெளிவந்த பீமா. இந்த படத்திற்கு பின்னர் ரிலீசான அனைத்து படங்களுமே எதிர்பார்த்த அளவு ஓடவில்லை என்று தான் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆனாலும் கூட தனது மகனை வைத்து வெற்றிப்படங்கள் கொடுத்து விடலாம் என்று கனவில் ஆதித்ய வர்மா படத்தின் மூலம் துருவ விக்ரமை அறிமுகப்படுத்தினார். தற்போது கூட அடுத்த படங்களுக்கான வேலைகளில் விக்ரம் கவனம் செலுத்துவராரோ இல்லையோ தன் மகனின் படங்களில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறாராம்.
இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் கூட தற்போது வரை அவரின் மார்க்கெட் குறையவில்லை. ஏனென்றால் 4 புது படங்களில் நடித்து வருகிறார். அவர் கைவசம் கோப்ரா, துருவ நட்சத்திரம், மகாவீர் கர்ணன்,பொன்னியின் செல்வன் போன்ற படங்களும் உள்ளது.
பல தோல்வி படங்களை கொடுத்தாலும் விக்ரம் இத்தனை இயக்குனர்களையும் கைக்குள் வைத்திருப்பது ரகசியமாக தான் உள்ளது. இந்தப் படங்கள் வெற்றி பெறவில்லை என்றால் சினிமாவை விட்டு விலகுவதற்கும் வாய்ப்புகள் உள்ளதாம்.