80களில் வலம் வந்த ஹீரோயின்கள் அனைவருமே தனக்கென ஒரு தனி இடம் கொண்டவர்கள். அழகிலும் நடிப்பிலும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல. அப்படி 80களில் இளைஞர்கள் இதயத்தை சுண்டி இழுத்த இடுப்பழகிதான் பானுப்ரியா. இவரது கவர்ச்சியான கண்களையும், இடுப்பையும் பார்த்து கவிழாத வாலிபர்களே அப்போது இல்லை எனலாம்.
பானுப்ரியா குச்சிப்புடி, பரதம் போன்ற கலைகளை கற்றவர். இவரது பள்ளி ஆண்டுவிழாவில் விருந்தினராக வந்திருந்த இயக்குனர் பாக்கியராஜ் இவரது பாவனைகளை கண்டு தூறல் நின்னு போச்சு படத்தில் ஹீரோயினாக நடிக்க வைக்க தீர்மானித்திருந்தார். ஆனால் அப்போது பானுப்ரியாவிற்கு 14 வயதே ஆகி இருந்ததால் நடிக்க வைக்கமுடியவில்லை.
தமிழில் பானுப்ரியா மெல்ல பேசுங்கள் என்னும் படத்தின் மூலம் அறிமுகமாகியிருந்தாலும் இவரது முதல் வெற்றிப்படம் பாக்கியராஜுடன் இவர் நடித்து வெளிவந்த ஆராரோ ஆரிரரோ படம்தான். இவர் சுமார் 80 தெலுங்கு படங்களிலும், 35 தமிழ் படங்களிலும் நடித்துள்ளார்.
இவருக்கு ஒரு தங்கை ஒரு அண்ணன். தங்கை சாந்தி ப்ரியா எங்க ஊரு பாட்டுக்காரன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர். அண்ணன் கோபால கிருஷ்ணன் நடிகை விந்தியாவை மணந்துகொண்டு பின்பு விவாகரத்து செய்துவிட்டார்.
பானுப்ரியா 1998ல் ஆதர்ஸ் என்னும் அமெரிக்க மாபிள்ளையை காதலித்து மணந்தார். பிறகு 2005ல் அவரிடமிருந்து விவாகரத்து பெற்றார். தற்போது தனது 14 வயது மகளுடன் தமிழகத்தில் வாழ்ந்து வருகிறார்.
அம்மா கதாபாத்திரத்தில் அவ்வபோது தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் இவர் வெகு காலத்திற்கு பிறகு தமிழில் மகளிர் மட்டும் படத்தில் ஜோதிகாவுடன் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார். நடனப்பள்ளி ஆரம்பிப்பதே தனது லட்சியம் என்று பானுப்ரியா கூறியுள்ளார்.
சினிமா பேட்டை கமெண்ட்ஸ்: பானுப்ரியா மாதிரி வேகமா டான்ஸ் ஆடுறதுக்கு இன்னும் தமிழ் சினிமாவுல யாரும் பொறக்கலை.