80களில் தமிழ் சினிமாவின் வசூல் ராஜா, மக்கள் நாயகன் என்றும் அழைக்கப்பட்டவர் ராமராஜன். கிட்டத்தட்ட 48 படங்களுக்கு மேல் நடித்தவர் 10 படங்களை இயக்கியுள்ளார். மதுரை மாவட்டத்தில் பிறந்த ராமராஜன், திரையரங்குகளில் டிக்கெட் விற்று, பிரபல தயாரிப்பாளரின் வீட்டின் தோட்டத்தில் வேலை பார்த்துள்ளார்.
ஒரு காலத்தில் ரஜினிகாந்த், கமலஹாசன் நிகராக களத்தில் நின்றவர். அவர் நடிப்பில் வெளிவந்து வெற்றி கண்ட படங்களின் வரிசையில் தற்போது பார்க்கலாம்.
நம்ம ஊரு நல்ல ஊரு:
1986இல் அழகப்பன் இயக்கத்தில், ராமராஜன் மற்றும் ரேகா நடிப்பில் வெளிவந்தது நம்ம ஊரு நல்ல ஊரு. கங்கை அமரன் இசையில் இந்தப் படம் மாபெரும் வெற்றி பெற்றது. ராமராஜன் சினிமா வாழ்க்கையை அடித்தளமாக அமைந்தது, சூப்பர் ஹிட்டான இந்த படம், தியேட்டரில் 100 நாட்களுக்கும் மேல் ஓடி வெற்றி கண்டது.
எங்க ஊரு பாட்டுக்காரன்:
கங்கை அமரன் இயக்கத்தில் ராமராஜன், ரேகா, நிஷாந்தி போன்ற பிரபலங்கள் நடிப்பில் வெளிவந்தது எங்க ஊரு பாட்டுக்காரன். இளையராஜாவின் இசையில் 1987இல் அதிக அளவில் கேட்கப்பட்ட பாடல்கள், என்ற பெயரும் கிடைத்தது. இந்த படத்தில் ராமராஜன் அரை டவுசர் போட்டுக்கொண்டு பால்காரராக நடித்திருப்பார். இன்றளவும் கிராமத்தில் இவருக்கான ரசிகர் பட்டாளமே உள்ளது.
எங்க ஊரு காவல்காரன்:
எங்க ஊரு காவல்காரன் 1988-ல் இன்றைய காமெடி நடிகர் கஜேந்திரன் இயக்கத்தில் ராமராஜன், கௌதமி, நம்பியார் போன்ற பிரபலங்கள் நடித்து வெளிவந்தது. மீண்டும் இளையராஜாவின் இசை மழையில் ரசிகர்கள் நனைந்தார்கள் என்றே கூறலாம். ராமராஜனின் சினிமா வாழ்க்கையை புரட்டிப்போட்டு, சூப்பர் ஹிட்டானது வசூல் ராஜா என்றும் அழைக்கப்பட்டார்.
என்ன பெத்த ராசா:
1989இல் ராமராஜன், ரூபிணி, ஸ்ரீதேவி, வினுசக்கரவர்த்தி போன்ற பிரபலங்கள் நடிப்பில், இளையராஜாவின் இசையில் வெளிவந்தது என்ன பெத்த ராசா. சிராஜ் இயக்கிய இந்த படம் 100 நாட்களையும் தாண்டி வசூல் சாதனை படைத்தது.
கரகாட்டக்காரன்:
கங்கை அமரன் இயக்கத்தில் ராமராஜன், கனகா, செந்தில், கவுண்டமணி போன்றவர்கள் போன்ற பிரபலங்கள் நடிப்பில் வெளிவந்தது கரகாட்டகாரன். இன்றளவும் காமெடியில் முதலிடத்தில் உள்ளது என்றே கூறலாம். இரண்டு கரகாட்டகாரர்களுக்கு இடையே நடக்கும் போட்டியை மிக அற்புதமாக கதை அமைத்திருப்பார். சிவாஜி மற்றும் பத்மினி நடிப்பில் வெளிவந்த தில்லானா மோகனாம்பாள் படத்தைப் போலவே இந்தப் படமும் வெற்றி பெற்றது.
முக்கியமாக கவுண்டமணி மற்றும் செந்தில் இணைந்து நடித்த நூறாவது படம். இந்த படத்தில் வரும் வாழைப்பழ காமெடி இன்றளவும் திரும்பத் திரும்ப பார்த்து திகட்டாத காமெடியாக அமைக்கப்பட்டிருந்தது. இளையராஜாவின் இசை இந்த படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம். 365 நாட்கள் ஓடிய ஒரே படம் என்ற சாதனையை படைத்தது மட்டுமில்லாமல் மதுரை மற்றும் சென்னையில் ரசிகர்களை அள்ளியது.
பாட்டுக்கு நான் அடிமை:
சண்முகப்ரியன் இயக்கத்தில் ராமராஜன், ரேகா, குஷ்பூ போன்ற பிரபலங்கள் நடிப்பில் வெளிவந்தது பாட்டுக்கு நான் அடிமை, பாடல்வரிகள், இசையை மட்டுமே வைத்து வெற்றி கண்ட படங்களின் வரிசையில் பாட்டுக்கு நான் அடிமை முக்கியமான இடத்தை பிடித்துள்ளது. இளையராஜாவின் இசை இந்த படத்திற்கு பெரும் பக்கபலமாக இருந்தது. இந்த படமும் ராமராஜன் வாழ்க்கையில் 150 நாட்களை தாண்டி ஓடி வெற்றி பெற்றது.
தங்கமான ராசா:
மீண்டும் அழகப்பன் இயக்கத்தில் 1989இல் வெளிவந்து வெற்றி கண்ட படம் தங்கமான ராசா. இந்த படத்தில் ராமராஜன் ஜோடியாக கனகா நடித்திருப்பார். கவுண்டமணி மற்றும் செந்தில் காமெடி மிக அற்புதமாக இருக்கும். படத்தின் வெற்றியை வைத்து தெலுங்கில் பால கிருஷ்ணாவை வைத்து ரீமேக் செய்யப்பட்டது.
இப்படி ஒரு கிராமத்திலிருந்து வந்து சினிமாவில் வசூல் ராஜாவாக இருந்த ராமராஜனின் வெற்றி படங்களின் வரிசைகளை மேலே கொடுத்துள்ளோம். அதில் இருக்கும் லிங்கயை கிளிக் செய்து படங்களை பார்த்து ரசியுங்கள்.