தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் ரஜினி கமலுக்கு நிகராக களத்தில் நின்று வென்றவர் நடிகர் மோகன். இவரை செல்லமாக மைக் மோகன் என்று அழைப்பார்கள். ஏனென்றால் இவர் நடிப்பில் வெளிவரும் படங்கள் மற்றும் பாடல்கள் மிக பிரம்மாண்டமாக ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. தமிழ் சினிமாவை பொறுத்தவரை மூடுபனி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் மோகன்.
1982 பிலிம்பேர் அவார்ட் விருதினை ‘பயணங்கள் முடிவதில்லை’ என்ற படத்திற்காக பெற்றார். இவர் நடிப்பில் வெளிவந்து இன்றளவும் ரசிகர்களிடையே திரும்பத் திரும்ப பார்க்க தூண்டும் படங்களின் வரிசையில் தற்போது பார்க்கலாம்.
பயணங்கள் முடிவதில்லை:
1982-ல் சவுந்தரராஜன் இயக்கத்தில் மோகன், பூர்ணிமா ஜெயராம் நடிப்பில் வெளிவந்தது பயணங்கள் முடிவதில்லை. இசைஞானி இளையராஜாவின் இசை இந்த படத்திற்கு மிகவும் பக்கபலமாக இருந்தது. இந்த படம் தியேட்டர்களில் 365 நாட்கள் ஓடி சில்வர் ஜூப்ளி பிலிம் என்ற பெருமையும் பெற்றது. பாடல்களால் மட்டுமே பெயர் போனவர் மோகன் என்ற பெருமை இந்த படத்தின் மூலம் கிடைக்க ஆரம்பிக்க தொடங்கியது.
நூறாவது நாள்
மணிவண்ணன் தயாரிப்பில் 1984-ல் விஜயகாந்த், மோகன், நளினி, சத்யராஜ் நடிப்பில் வெளிவந்த பிரம்மாண்ட வெற்றி பெற்ற படம் நூறாவது நாள். இந்த படமும் கிட்டத்தட்ட 200 நாட்களை தாண்டி ஓடியது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் சத்யராஜ் வில்லன் கதாபத்திரத்தில் மிக அற்புதமாக நடித்திருப்பார். இந்த படம் தமிழில் வெற்றி பெற்றதால் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.
24 மணி நேரம்
மணிவண்ணன் இயக்கத்தில் மீண்டும் மோகன், சத்யராஜ், நளினி, ஜெய்சங்கர் போன்ற பிரபலங்களின் நடிப்பில் வெளிவந்தது 24 மணி நேரம். இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜாவின் இசை பக்கபலமாக அமைந்தது. பாடல்கள் இன்றளவும் ரசிக்கக் கூடியதாக அமைந்தது. மணிவண்ணன் இயக்கத்தில் திரில்லராக பிரமாண்ட வெற்றிபெற்ற படம். இந்த படம் பல விருதுகளை தட்டிச் சென்றது, 150 நாட்களையும் தாண்டி தியேட்டர்களில் ஓடியது குறிப்பிடத்தக்கது.
உதயகீதம்
1985 மோகன், லட்சுமி, ரேவதி போன்ற பிரபலங்கள் நடிப்பில் வெளிவந்தது உதயகீதம். இந்த படம் கிட்டத்தட்ட 148 நாட்கள் தியேட்டர்களில் ஓடி சில்வர் ஜூப்ளி படமாக அறிவிக்கப்பட்டது. இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜாவின் இசை மெய்சிலிர்க்க வைத்தது என்றே கூறலாம். இசைஞானி இளையராஜாவிற்கு இந்த படம் 300 ஆவது படமாக அமைந்தது.
மௌனராகம்
காதல் காவியத்திலும் கரை கண்டவர் மணிரத்னம். 1986-ல் மோகன், ரேவதி இசைஞானி இளையராஜாவின் படைப்பில் வெளிவந்த மௌனராகம் படத்தின் மூலம் நிரூபித்தார். இந்த படத்தில் கல்லூரி படிக்கும்போது ரேவதி கார்த்திக் காதலிப்பது போன்றும் பின்பு வீட்டில் கூறியபடி மோகனை திருமணம் செய்து கொண்டு, ஒரு பெண்ணின் இரட்டிப்பான மனசை துல்லியமாக வெளிக்கொண்டு வந்திருப்பார் மணிரத்னம்.
இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜாவின் இசை ஒரு முதுகெலும்பு. இந்த படம் பாக்ஸ் ஆபிஸ் வெற்றி பெற்றது மட்டுமல்லாமல், 175 நாட்களுக்கு மேல் தியேட்டரில் திரையிடப்பட்டுள்ளது. பல விருதுகளை தட்டிச் சென்றது, படத்தின் வெற்றியை வைத்து ஹிந்தியில் கசாப் மற்றும் கன்னடத்திலும் ரீமேக் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மெல்ல திறந்த கதவு
சுந்தர்ராஜன் இயக்கத்தில் 1986 ஆம் ஆண்டு மோகன், ராதா, அமலா நடிப்பில் வெளிவந்தது மெல்ல திறந்த கதவு. இந்த படத்தில் எம்.எஸ்.விஸ்வநாதன் மற்றும் இளையராஜா இசையமைத்து இருப்பார்கள். பாடலுக்காகவே ஓடிய படம் என்ற பெருமை இந்த படத்திற்கு உண்டு. இந்த படம் பாக்ஸ் ஆபீஸில் ஹிட்டடித்தது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் வரும் ‘வா வெண்ணிலா’ என்ற பாடல் விஸ்வநாதன் இசையமைத்து இருப்பார், இன்றளவும் ரசிகர் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது.
இதய கோவில்
மணிரத்தினம் இயக்கத்தில் 1985 ஆம் ஆண்டு வெளிவந்த இதயக்கோயில். இந்த படத்தில் மோகன், ராதா, அம்பிகா போன்ற பிரபலங்கள் நடித்திருப்பார்கள். இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜாவின் இசையில் ரசிகர்களை கவர்ந்து இழுப்பார். இந்த படத்தில் வரும் ஒவ்வொரு பாடல்களும் மெய்சிலிர்க்க வைத்திருப்பார் இளையராஜா, கிட்டத்தட்ட 150 நாட்களையும் தாண்டி இந்த படம் மாபெரும் சாதனை படைத்தது.