வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

சுனாமியை போன்றே நெஞ்சை பதறவைக்கும் இயற்கை நிகழ்வுகள்.. நம்பமுடியாத மர்மங்கள்

பத்து மணிநேர மின்னல்: மழை வருவதற்கு அறிகுறியாக மேகக் கூட்டங்களின் நடுவே தோன்றும் மின்னலை பார்ப்பதுண்டு. உலகிலேயே வெனிசுலா நகரில் லேக் மரக்கைபோ என்ற ஏரிக்கரையில் வருடத்திற்கு சுமார் 120 நாட்களும் நாளொன்றுக்கு பத்து மணி நேரமாகவும் தொடர்ச்சியாக மின்னல் ஏற்படுகிறதாம்.

ஐஸ் சுனாமி: கடலோர பகுதியில் உள்ள மக்களை காவு வாங்குவதில் சுனாமிக்கு நிகர் சுனாமி தான். அதிலும் ஐஸ் சுனாமி ரொம்ப மோசம். இவை கனடா நாட்டின் துருவப் பகுதியிலும் வட அமெரிக்காவிலும் அடிக்கடி ஏற்படுகிறது. இதனால் அந்தபகுதியில் மக்கள் வசிப்பதில்லை.

ice-tsunami
ice-tsunami

நெருப்பு சூறாவளி: சூறாவளி காற்றானது கண்ணுக்கு தென்பட்ட பொருட்களை எல்லாம் சின்னா பின்னமாக்கும். இது நிலத்தில் மட்டுமல்ல, நீர் நிலைகளிலும் கூட ஏன் நெருப்பினாலும் கூட உருவாகும். 2013ம் ஆண்டு அமெரிக்காவில் பொக்ளஹமோ என்ற இடத்தில் 2.6 மைல் உயரத்திற்கு சூறாவளி எழும்பியது. வருடத்திற்கு பலமுறை இந்த நிகழ்வு ஏற்படுகிறது.

ஒளிரும் கடல் அலைகள்: மாலத்தீவுகளில் பவுர்ணமி முழு நிலவின் போது இரவு நேரங்களில் ஒளிரும் கடல் அலைகளை பார்ப்பதுண்டு. இதற்கு காரணம் பயோ லுவிங்ஸ்டன் பிளான்டம் என்ற உயிரி தான். இது மீன்களின் உணவு பொருளாகும். இதிலுள்ள லூசு பிரஸ் என்ற வேதிப்பொருளின் மூலம் ஆக்ஸிஜனேற்றம் செய்வதன் விளைவாக ஒளிர்கிறது.

எண்ணை அலைகள்: கடலில் கொட்டப்படும் எண்ணெய் பீப்பாய்களில் உள்ள வேதிப்பொருள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் தேங்கிவிடும். அவை சமீபத்தில் ஆஸ்திரேலியா சிட்னி கடற்கரையில் வேடிக்கை காட்டும் சோப்பு நுரையுடன் கூடிய பேரலையை ஏற்படுத்தியது. தற்போது அதற்காகவே அங்கு எண்ணை கொட்டப்பட்டு சுற்றுலா தலமாக மாற்றிவிட்டனர்.

பஞ்சு மூட்டை மேகக்கூட்டங்கள்: அட்லாண்டிக் பகுதிகளில் பஞ்சு மூட்டைகளை கட்டி தொங்க விட்டது போன்ற மேகக்கூட்டங்கள் காட்சி அளிக்கிறது. இதற்கு காரணம் வெப்பச்சலனம் மற்றும் வெப்பமண்டல காற்றழுத்தமே. மேலும் மார்னிங் கிளவுட் என்பது நிலப்பரப்பிற்கு மிக அருகில் தோன்றும் மேகக்கூட்டங்கள், இது ஒரு குறிப்பிட்ட பகுதிகளில் சுழன்று கொண்டே செல்கிறது.

இதுபோன்ற ஆச்சரியமூட்டும் நெஞ்சை பதற வைக்கும் தத்ரூபமான இயற்கை நிகழ்வுகள் பல நமக்கு தெரியாமல் உலகமெங்கும் நடந்து கொண்டேதான் இருக்கிறது.

Trending News