வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

உச்ச நட்சத்திரங்களை திரும்பி பார்க்க வைத்த 5 பெண் இயக்குனர்கள்.. விடா முயற்சி விஸ்வரூப வெற்றி

ஆண்களுக்கு நிகராக தனித்துவமான கதைகளில் நடித்து வெற்றி பெற்ற நடிகைகளை நமக்குத் தெரியும். அதில் முக்கியமாக நயன்தாரா, ஜோதிகா போன்ற நடிகைகள் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளில் நடித்து வெற்றி பெற்றவர்கள்.

அதேபோல் முன்னணி இயக்குனர்களுக்கு நிகராக படங்களை வெளியிட்டு வெற்றிக்காக போராடும் பெண் இயக்குனர்களின் படங்களை தற்போது பார்க்கலாம்.

சுதா கொங்கரா: மணிரத்னத்திடம் துணை இயக்குனராக 7 வருடங்கள் வேலை பார்த்துள்ளார். 2010-ல் துரோகி என்ற படத்தை இயக்கியுள்ளார், ஸ்ரீகாந்த் – விஷ்ணு விஷால் – பூர்ணா – பூனம் பஜ்வா போன்ற பிரபலங்கள் நடித்துள்ளனர்.

அதற்கு பின்னர் 2016-ல் இறுதிச்சுற்று என்ற படத்தை இயக்கி மரண மாஸ்ஸான வெற்றி கொடுத்தார். இதன் மூலம் இயக்குனராக அங்கீகாரம் பெற்ற சுதா கொங்கரா இந்திய அளவில் பல விருதுகளையும் தட்டிச் சென்றார். இதே வெற்றியை வைத்து சூர்யாவை வைத்து சூரரைப்போற்று என்ற படத்தை எடுத்து தற்போது அது வெளிவர காத்துக் கொண்டிருக்கின்றது.

லட்சுமி ராமகிருஷ்ணன்: ஜீ தமிழ் பிரபல நிகழ்ச்சியான சொல்வ தெல்லாம் உண்மை மூலம் பிரபலமானவர் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் என்பது நமக்குத் தெரியும். இவர் மலையாளம், தமிழ், தெலுங்கு போன்ற படங்களில் நடித்துள்ளார்.

ஆனால் இவர் கிட்டத்தட்ட 4 படங்களை இயக்கியுள்ளார். நெருங்கி வா, முத்தமிடாதே, அம்மணி, ஹவுஸ் ஓனர் போன்ற படங்களை இவர் வெளியிட்ட படங்கள். 2019 வெளிவந்த ஹவுஸ் ஓனர் என்ற படத்தில் கிஷோர், ஸ்ரீரஞ்சனி, பசங்க படத்தில் நடித்த கிஷோர் போன்ற பிரபலங்கள் நடித்து இருப்பார்கள். இந்த படம் இன்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவல் ஆஃ இந்திய என்ற விருது வழங்கும் விழாவிற்கு சிறந்த படத்திற்காக பரிந்துரைக்கப்பட்டது.

laxmi-ramakrishnan
laxmi-ramakrishnan

புஷ்கர் காயத்ரி: ஓரம்போ, வா குவாட்டர் கட்டிங், விக்ரம் வேதா போன்ற படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு இயக்குனராக அங்கீகரிக்கப்பட்டவர் புஷ்கர் காயத்ரி. இவர் இயக்கத்தில் விக்ரம் வேதா திரைப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்த படம் சிறந்த இயக்குனர், சிறந்த கதை, சிறந்த திரைக்கதை, சிறந்த நடிப்பு என்ற பல விருதுகளையும் தட்டிச் சென்றது. மாதவன், விஜய் சேதுபதி, ஷரதா ஸ்ரீநாத், கதிர், வரலட்சுமி சரத்குமார் போன்ற பிரபலங்கள் நடிப்பில் 11 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட, கிட்டத்தட்ட 60 கோடி வரை வசூல் செய்தது.

சௌந்தர்யா ரஜினிகாந்த்: தமிழ் சினிமாவில் ஒரு கிராபிக் டிசைனராக அறிமுகமானவர் சௌந்தர்யா ரஜினிகாந்த். பின்பு தயாரிப்பிலும், இயக்கத்திலும் கால் பதித்தார். இவர் இயக்கத்தில் கோச்சடையான், வேலையில்லா பட்டதாரி 2 போன்ற படங்கள் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. தனது தந்தையின் படையப்பா படத்தில் கிராபிக் டிசைனராக வேலை பார்த்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுபோக பொன்னியின் செல்வன் என்ற வெப் சீரியலில் இடம் பிடித்துள்ளார்.

ஐஸ்வர்யா தனுஷ்: இவர் ஒரு பின்னணி பாடகி மட்டுமல்லாமல், இயக்குனராகவும் வேலை பார்த்துள்ளார். இவர் இயக்கிய படங்கள் என்று பார்த்தால் 3, வை ராஜா வை, சினிமா வீரன் போன்ற படங்கள் அடங்கும். இதில் ‘3’ என்ற படத்தில் தனுஷ், ஸ்ருதிஹாசன் போன்ற பிரபலங்கள் நடித்திருப்பார்கள், அனிருத் இந்த படத்திற்கு இசை அமைத்திருப்பார். இந்த படம் சிறந்த இயக்குனருக்கான விருது வழங்கும் விழாவிற்கு பரிந்துரைக்கப்பட்டது அதற்குப் பின்னர் எந்த படமும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ஓடவில்லை என்பது தான் உண்மை.

Trending News