ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

சந்தேகத்தால்‌ அடித்து விரட்டி விடப்பட்ட மூன்றாவது நபர்.. சித்ரா தற்கொலையில் பல திடுக்கிடும் தகவல்!

புரியாத புதிருக்கு விடை தேடுவது போல இருக்கிறது நடிகைகளின் தற்கொலைகள் அதிலும் சின்னத்திரை நடிகைகளின் தற்கொலை எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே போகிறது. சமீபத்திய சித்ராவின் தற்கொலை பற்றிய விசாரணை சினிமா பாணியில் நடக்கிறது. அதனை கிளற கிளற பல அதிர்ச்சியான தகவல்களும் வெளிவருகிறது.

படிப்படியாக தனது கடின உழைப்பால் முன்னேறி, புகழின் உச்சத்தை அடைந்து ஜொலித்துக் கொண்டிருந்த சித்ரா, கடந்த டிசம்பர் 9ஆம் தேதி தனியார் விடுதி ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆனால் சித்ரா தைரியமான பெண் என்றும், இது போன்ற கோழைத்தனமான முடிவுகளை எடுப்பவர் அவர் அல்ல என்றும் பல்வேறு தரப்பிலிருந்து கருத்துகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் சித்ராவிற்கு உதவியாளராக பணியாற்றிய சலீம் என்பவர் ஹேமந்த் பற்றி பல அதிர்ச்சியான தகவல்களை பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார். அதாவது சித்ரா பங்கேற்கும் பட சூட்டிங்கிலும், நிகழ்ச்சிகளிலும் நடக்கும் நிகழ்வுகளை எல்லாம் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களாக எடுப்பது தான் சலீமின் வேலையாம். ஆனால் ஹேமந்த் நாத் சித்ராவின் வாழ்க்கைக்குள் வந்த பிறகு, சலீம் சித்ரா உடன் ஷூட்டிங் ஸ்பாட்டுகளுக்கு சென்று வீடியோக்களை எடுப்பதற்கு ஹேமந்த் தடை போட்டாராம்.

அதே போல், சித்ராவின் வீடியோக்களை வைத்து சலீம் பணம் சம்பாதிப்பதாக நினைத்துக்கொண்டு, அவரது செல்போனை பிடுங்கி அதில் இருந்த வீடியோக்களை டெலிட் செய்ததோடு, அவரை சித்ராவிடம் இருந்து அடித்து விரட்டி அனுப்பினாராம் ஹேமந்த். இந்த தகவல்களை எல்லாம் ஒரு பத்திரிகையின் பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார் சலீம்.

அதுமட்டுமில்லாமல், அந்த பேட்டியில் சலீம், ‘ஹேமந்த் பத்து மணி வரைக்கும் படுக்கையை விட்டு எந்திரிக்கவே மாட்டாரு. வேலைக்கும் போக மாட்டாரு, சித்ரா ஷூட்டிங் வந்தா அவங்களுக்கு போன் பண்ணிட்டே இருப்பாரு’ என்று கூறியிருக்கிறார்.

மேலும் இந்த தகவல்களை கேட்ட பலரும், போலீசார் விசாரணை  வலையில் சித்ராவின் உதவியாளர் ஏன் இல்லை? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

vjchitra-hemanth-cinemapettai
vjchitra-hemanth-cinemapettai

ஏற்கனவே சித்ராவின் வழக்கில் சித்ரா கழுத்தில் இல்லாத தடயங்கள், மார்பில் காயங்கள், ஹோட்டல் ரூம் சிசிடிவி காட்சி இல்லாதது என பல மர்மங்கள் உள்ள நிலையில், சலீமின் இந்தப் பேட்டி, பலரது சந்தேகங்களை மேலும் தூண்டியுள்ளது.

இந்த ஒரு தற்கொலைக்கான காரணத்தை கண்டுபிடித்தால் பல நடிகைகளின் தற்கொலைக்கான காரணங்களுடன் ஒத்துப்போகும் வாய்ப்பிருக்கிறது. அதனால் விரைவில் பல பேர் சிக்குவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

Trending News