சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் சீரியல் மூலம் சின்னதிரைக்கு அறிமுகமானார் வாணி போஜன். அதன்பிறகு ஜெயா டிவியில் மாயா சீரியலிலும், விஜய் டிவியில் ஆகா சீரியலிலும் நடித்து ரசிகர்களிடம் நன்கு பிரபலம் அடைந்தார்.
தொடர்ந்து சின்னத்திரையில் மட்டும் கவனம் செலுத்தி வந்த வாணி போஜன் வெள்ளித்திரையில் நடிப்பதற்கான வாய்ப்பை பயன்படுத்தி ஓ மை கடவுளே எனும் படத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் கொண்டாடக்கூடிய நடிகையாக பிரபலமடைந்தார்.
இவரது நடிப்பில் தற்போது உருவாகிக்கொண்டிருக்கும் திரைப்படங்கள் கேசினோ ,தாஜ் திருவா மற்றும் பகைவனுக்கு அருள்வாய் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
வாணி போஜன் நடிப்பில் சமீபத்தில் ஹாட்ஸ்டார் வெளியான ட்ரிபிள் எனும் தொடர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதனால் இவருக்கு தற்போது அடுக்கடுக்கான பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.
தற்போது வாணி போஜன் அவரது சமூக வலைதளப் பக்கத்தில் டீசர்ட் அணிந்தபடி எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதனைப் பார்த்த ரசிகர்கள் கூல் ஸ்டைல், ஐ லவ் யூ மற்றும் போடு ரகிட போன்று கமெண்ட் பாக்ஸில் பதிவு செய்து வருகின்றன.
ஒரு சில ரசிகர்கள் வாணி போஜனின் புகைப்படத்தை பார்த்து ஒருவேளை புத்தாண்டு ஸ்பெஷலாக வெளியிட்டுள்ளாரோ எனவும் கமெண்ட் பாக்ஸ்ல் பதிவு செய்துவருகின்றனர்.