இந்திய அளவில் பிரபலமான நடிகை ஒருவர் ஒரு குறிப்பிட்ட முன்னணி நடிகரின் படத்தில் ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆட கிட்டத்தட்ட ஒரு கோடி கேட்டுள்ள சம்பவம் சினிமா வட்டாரத்தை தலைகீழாகத் திருப்பிப் போட்டு விட்டதாம்.
தெலுங்கில் பிரபல நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் ஐந்து மொழிகளில் அதிரடியாக உருவாகி வரும் திரைப்படம் புஷ்பா. இந்த படத்தில் அல்லு அர்ஜுனுக்கு வில்லனாக நடிக்க பல தமிழ் நடிகர்களிடம் கேட்டு வருகின்றனர்.
விஜய் சேதுபதி மற்றும் பாபி சிம்ஹா ஆகியோர் இந்த வாய்ப்பை நழுவ விட்டதைத் தொடர்ந்து தற்போது தமிழ் சினிமாவின் சாக்லேட் பாய் ஆர்யா அந்த வில்லன் கதாபாத்திரத்தை தட்டிக் தூக்கி விட்டாராம். ஏற்கனவே அல்லு அர்ஜுனுடன் வருடு என்ற படத்தில் ஆர்யா வில்லனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து புஷ்பா படத்திலும் வில்லனாக நடிக்க உள்ளாராம். மேலும் புஷ்பா படத்தில் ஒரு ஐட்டம் பாடலுக்கு நடனமாட பல நடிகைகளிடம் கேட்டு வருகின்றனர். இந்நிலையில் கடைசியாக படக்குழு பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானியிடம் தஞ்சமடைந்துள்ளது.
அவரும் இதுதான் சாக்கு என கற்சிப் கட்டி ஆட சொன்னாலும் எனக்கு பிரச்சனை இல்லை, ஆனால் ஒரு பாட்டுக்கு ஒரு கோடி சம்பளம் வேண்டும் என குண்டைத் தூக்கிப் போட்டு விட்டாராம்.
இருந்தாலும் திஷா பதானிக்கு பாலிவுட் சினிமாவில் நல்ல வரவேற்பு இருப்பதால் படக்குழு வொர்த்து தான் என முடிவு செய்து ஓகே சொல்லி விட்டார்களாம். விரைவில் புஷ்பா படக் குழுவினருடன் இணைந்து குத்தாட்டம் போட உள்ளார் திஷா பதானி. கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் திஷா பதானி நடித்திருந்தார் என்பதும் குறிப்பிட வேண்டிய ஒன்று.