திங்கட்கிழமை, டிசம்பர் 16, 2024

அட, நம்ம சந்திரமுகி பொம்மியா இது! 15 வருடங்கள் கழித்து வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்

பி வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் சந்திரமுகி. இப்படத்தில் நயன்தாரா, ஜோதிகா, நாசர், வடிவேல் போன்ற ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. மேலும் ரஜினியின் திரை வாழ்க்கையில் சந்திரமுகி படம் ஒரு முக்கிய படம் என்றே கூறலாம்.

அந்த அளவிற்கு இந்த படம் ஒரு வருடத்திற்கு மேல் திரையரங்களில் ஓடி வெற்றி சாதனை படைத்தது. இன்னமும் இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

சந்திரமுகி படத்தில் பொம்மி கதாபாத்திரத்தில் பிரகர்ஷிதா சின்ன பெண்ணாக நடித்திருந்தார். இப்படத்தில் ரஜினியுடன் இவர் ஒரு பாடலுக்கு நடனமாடி இருப்பார். இப்பாடல் இன்னமும் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.

Prakash Shita
Prakashita

சந்திரமுகி படத்திற்கு பிறகு இவர் வேறு எந்த ஒரு திரைப்படத்திலும் காணவில்லை. இதனால் ரசிகர்கள் சந்திரமுகி படத்தை பார்க்கும்போது இந்த சிறிய பெண் இப்பொழுது எப்படி இருப்பார் என யோசித்துக் கொண்டு தான் இருந்தார்கள்.

தற்போது  இவர்களது யோசனைக்கு விடையாக பிரகர்ஷிதாவின் தற்போதைய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. பிரதர்ஷிதாவின் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், அட நம்ம பொம்மியா இப்படி இருக்கிறார் என அசந்து போயுள்ளனர்.

சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தில் பிரகர்சிதா நடிப்பாரா என தொடர்ந்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

- Advertisement -

Trending News