விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வருகின்ற ஜனவரி 13-ஆம் தேதி மாஸ்டர் திரைப்படம் உலகமெங்கும் வெளியாக உள்ளது. இதற்கான புரொமோஷன்கள் சமூக வலைதளங்களில் அனல் பறந்து கொண்டிருக்கிறது.
ஒரு வருடமாகியும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஒரு துளிகூட ரசிகர்கள் மத்தியில் குறையவில்லை என்பதே மாஸ்டர் பட குழுவினருக்கு கிடைத்த மிகப்பெரிய பூஸ்ட் என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள்.
இருந்தாலும் வியாபார ரீதியாக மாஸ்டர் படம் முன்னாடியை விட சில பல அட்ஜஸ்ட்மெண்ட்கள் செய்ய வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளார் தயாரிப்பாளர். முதலில் மாஸ்டர் படம் 200 கோடி வியாபாரம் ஆனது குறிப்பிடத்தக்கது.
ஆனால் தற்போது அனைத்து விநியோகஸ்தர்கள் தரப்பிலும் மாஸ்டர் படத்தின் விலையை கொஞ்சம் குறைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார் ஒரு பெரிய தொகையை குறைத்துள்ளாராம்.

ஒருவேளை பெரிய அளவு இலாபம் வந்தால் மட்டும் பழையை விலையை கொடுங்கள் எனவும், இல்லையென்றால் அடுத்தடுத்த படங்களில் சரி செய்து கொள்ளலாம் என வாக்குறுதி கொடுத்துள்ளாராம். லலித் குமார் தயாரிப்பில் அடுத்தடுத்து தமிழ் சினிமாவில் பல திரைப்படங்கள் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.
200 கோடியில் இருந்து தற்போது கிட்டத்தட்ட 50 முதல் 60 கோடி பிசினஸ் குறைந்துள்ளது என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள். எப்போதுமே தயாரிப்பு தரப்பு வியாபாரம் சம்பந்தப்பட்ட விவரங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட மாட்டார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.
மாஸ்டர் படம் வசூல் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் ரிலீஸ் செய்யவில்லை எனவும், தியேட்டர்களுக்கு மீண்டும் மக்கள் வருவார்களா என்பதை சோதித்துப் பார்க்கவே இந்த முயற்சி எனவும் விஜய் வட்டாரங்களிலிருந்து செய்திகள் வெளியாகி வருகின்றன.