பிரபல சர்ச்சை இயக்குனர் ஒருவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் பெண்களின் உடல் தான் எனக்கு பிடிக்கும் எனவும் அவர்கள் மூளை எனக்கு பிடிக்காது எனவும் கூறியுள்ளது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கு சினிமாவில் தன்னுடைய கேரியரை ஆரம்பித்து தற்போது இந்தி சினிமாவில் பிரபலமான இயக்குனராக வலம் வருபவர் தான் ராம் கோபால் வர்மா. இந்த கோவிட் காலத்தில்கூட இயக்குனராக அதிக சம்பளம் பெற்றவர் ராம் கோபால் வர்மா தான்.
அதற்குக் காரணம் தன்னுடைய ஆர்ஜிவி வேர்ல்ட் என்ற ஓடிடி தளத்தில் சின்ன சின்ன குறும்படங்களை எடுத்து வெளியிட்டு அதன்மூலம் நன்றாக கல்லா கட்டினார். முற்றிலும் பெண்களின் கவர்ச்சியை மையப்படுத்தி திரில்லர் கதையை உருவாக்கி வெளியான படங்கள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யாவை வைத்து ரத்த சரித்திரம் என்ற படத்தை இயக்கியிருந்தார். ராம்கோபால் வர்மா எப்போதுமே சர்ச்சையான விஷயங்களை பேசி சமூக வலைதளப் பக்கங்களில் ரசிகர்களிடம் வாங்கிக் கட்டிக் கொள்வார்.
அந்த வகையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் எனக்கு பெண்களின் உடல் மட்டும்தான் வேண்டும் எனவும், அவர்களின் மூளை வேண்டாம் எனவும் ராம்கோபால் வர்மா கூறியுள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. பெண்களை ஆபாசமாக பார்க்கும் அவரது இந்த கருத்துக்கு எதிர்ப்பு வலுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தெலுங்கு சினிமாவில் உள்ள நடிகர்களை வம்புக்கு இழுத்து கொண்டிருந்த ராம் கோபால் வர்மாவின் பார்வை தற்போது நடிகைகளின் மீது சென்றது சினிமா வட்டாரத்தில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளதாம்.