அர்ஜுன் ரெட்டி பட ஹிந்தி ரீமேக்கான கபீர் சிங் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த நடிகை ஒருவர் தன்னுடைய குண்டான உடம்பை வைத்துக்கொண்டு நிர்வாண புகைப்படம் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
தெலுங்கில் 2017 ஆம் ஆண்டு விஜய் தேவர்கொண்டா மற்றும் ஷாலினி பாண்டே ஆகியோர் நடிப்பில் உருவாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் அர்ஜுன் ரெட்டி.
இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அனைத்து மொழிகளிலும் அர்ஜுன் ரெட்டி படம் ரீமேக் ஆனது. தமிழில் கூட துருவ் விக்ரம் நடிப்பில் பாலா இயக்கத்தில் வர்மா என்ற பெயரிலும், ஆதித்ய வர்மா என்ற பெயரிலும் இரண்டு முறை ரீமேக் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த படம் பாலிவுட்டிலும் ரீமேக் ஆனது. பாலிவுட் நடிகர் ஷாகித் கபூர் மற்றும் கியாரா அத்வானி ஆகியோர் நடிப்பில் 2019ஆம் ஆண்டு கபீர் சிங் என்ற பெயரில் இந்த படம் வெளியானது. அங்கேயும் பாக்ஸ் ஆபிஸில் செம வசூல் செய்தது.
கபீர் சிங் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தவர்தான் பிரபல மராத்தி நடிகை வனிதா காரட்(vanita kharat). இவர் கிட்டத்தட்ட 100 கிலோ உடல் எடை கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் 2021 ஆம் ஆண்டு காலண்டர் புகைப்பட போட்டோசூட் ஒன்றிற்கு ஒட்டு துணி இல்லாமல் வனிதா கொடுத்துள்ள போஸ் இணைய தளங்களில் செம வைரலாக பரவியுள்ளது.
மேலும் இந்த புகைப்படம் இந்திய அளவில் ட்ரெண்டிங் என்பதும் குறிப்பிடத்தக்கது. பாடி பாசிட்டிவிட்டி என்ற நோக்கத்தில் அந்த புகைப்படத்தை உருவாக்கியதாகவும் வனிதா குறிப்பிட்டுள்ளார்.