திங்கட்கிழமை, டிசம்பர் 16, 2024

சூப்பர் ஹிட் படம் கொடுத்த இயக்குனரை 25 வருடமாக கிட்ட சேர்க்காத தல அஜித்.. காரணம் இதுதான்!

தல அஜித் தனக்கு சூப்பர் ஹிட் படம் கொடுத்த இயக்குனரை கிட்டத்தட்ட 25 வருடமாக கிட்டக்கூட சேர்க்காமல் இருப்பதற்கு காரணம் என்ன என்பதை பிரபல நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் உள்ள முக்கிய நடிகர்களில் முன்னணி நடிகராக இருப்பவர் தல அஜித். பிரம்மாண்ட பொருட்செலவில் அடுத்ததாக வலிமை என்ற படம் உருவாகி வருகிறது. நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கிய வினோத் வலிமை படத்தை இயக்கி வருகிறார்.

அஜித்தின் சினிமா கேரியரில் ஒரு வருடத்திற்கு மேல் படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கும் முதல் படம் இதுதான். மேலும் இதுவரை வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கூட வெளியாகவில்லை என்பது சோகம்தான்.

ஆனால் அதைவிட சோகமான விஷயம் என்னவென்றால் தல அஜித் தனக்கு 25 வருடத்திற்கு முன்னர் ஆசை என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த வசந்த் என்ற இயக்குனருக்கு அடுத்தடுத்து வாய்ப்பு கொடுக்காமல் தற்போது வரை அவரை ஒதுக்கி வைத்துள்ளதுதான்.

தல அஜித் மற்றும் சுவலட்சுமி நடிப்பில் 1995ம் ஆண்டு வெளியாகி சூப்பர்ஹிட்டடித்த திரைப்படம் ஆசை. இந்த படத்தை இயக்கியவர் தான் வசந்த். வசந்த் ஆசை படத்தை இயக்கி கொண்டிருக்கும்போது அஜித் வளர்ந்து வரும் ஹீரோ என்பதால் அவரிடம் கொஞ்சம் கண்டிப்பாக இருந்து விட்டாராம்.

அது தல அஜித்தின் கேரக்டருக்கு செட்டாகவில்லையாம். ஆசை படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் தல அஜித்தை வைத்து படம் இயக்க ஆசைப்பட்டு வாய்ப்பு கேட்ட வசந்துக்கு தற்போது வரை வாய்ப்பு கொடுக்கவில்லையாம் தல அஜித். இனிமேல் போய் கேட்டாலும் வாய்ப்பு தர மாட்டார்.

aasai-vasanth
aasai-vasanth

தன்னுடன் ஒத்துப்போகும் இயக்குனருக்கு தொடர்ந்து அடுத்தடுத்த பட வாய்ப்புகளை கொடுக்கவும் தல அஜித் தயங்கியதில்லை. அதற்கு எடுத்துக்காட்டாக சிறுத்தை சிவா(தொடர்ந்து 4 படம்) மற்றும் வினோத்(தொடர்ந்து 2 படம்) ஆகியோரைச் குறிப்பிட்டு சொல்லலாம்.

- Advertisement -

Trending News