புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

பிக் பாஸ்ஸில் டிக்கெட் டு பினாலே வின்னர் யார் தெரியுமா? சித்து வேலையை சிறப்பா செய்யும் விஜய் டிவி

சின்னத்திரையில் தற்போது வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் பிக் பாஸ் சீசன் 4. இந்த நிகழ்ச்சி இன்னும் சில நாட்களில் முடிவடைய உள்ளது. இதனால் இந்நிகழ்ச்சியில் யார் ஜெயிக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பும் மக்களிடையே அதிகளவில் காணப்படுகிறது.

அதேபோல், இந்த நிகழ்ச்சியின் சுவாரஸ்யத்தை கூட்டும் வகையில், தற்போது இந்த வீட்டில் டிக்கெட் டு பினாலே டாஸ்க் நடைபெற்று வருகிறது. மேலும் இந்த டாஸ்க்கில் அதிக மதிப்பெண்களை பெற்று முதலிடம் பிடிக்கும் நபர் டிக்கெட்டை வென்று நேரடியாக இறுதி வாரத்திற்குள் நுழைவார் என்றும், குறைவான மதிப்பெண் பெற்றிருப்பவர் வீட்டை விட்டு வெளியேற்றபடுவார் என்றும் கூறப்பட்டது.

இதுவரை நடைபெற்ற ஆறு டாஸ்க்களின் அடிப்படையில் யார் யார் எந்தெந்த இடங்களை பிடித்திருக்கிறார் என்று கீழே காண்போம்.

  • ரம்யா பாண்டியன்- 27
  • சோம்- 25
  • ரியோ- 29
  • கேப்ரில்லா- 16
  • ஆரி- 20
  • பாலா- 25
  • ஷிவானி- 27
kamal-bigg-boss-4

அதுமட்டுமில்லாமல், விஜய் டிவியின் செல்லப்பிள்ளையான ரியோ ராஜ் தான் இந்த டிக்கெட்டை வெல்வார் என்றும் பரவலாக சொல்லப்படுகிறது. ஏனென்றால், அதற்கான சித்து வேலையை சிறப்பாக விஜய் டிவி முழுமூச்சாக ஈடுபட்டு உள்ளதாம். அதேபோல், இதுவரை நடைபெற்ற டாஸ்க்கிலும் ரியோ தான் அதிக மதிப்பெண்களை பெற்றிருக்கிறார்.

RioRaj
RioRaj

எனவே, ‘என்ன நடந்தாலும் ரியோ பைனலுக்கு வருவது உறுதி’ என்று இணையதளங்களில் பலர் தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

Trending News