தளபதி விஜய்யுடன் பணியாற்ற பல இயக்குனர்களும் காத்துக் கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் பிரபல இயக்குனர் ஒரு காலத்தில் சென்சேஷனல் இயக்குனராக வலம் வந்தபோது விஜய்யுடன் பணியாற்ற கிடைத்த வாய்ப்பை தவற விட்டுவிட்டு 7 வருடமாக காத்துக் கொண்டிருக்கிறாராம்.
விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் மாஸ்டர் படம் வருகின்ற பொங்கலை முன்னிட்டு ஜனவரி 13-ஆம் தேதி உலகமெங்கும் வெளியாக உள்ளது. இதற்கான ரிலீஸ் வேலைகள் அனல் பறந்து கொண்டிருக்கின்றன.
மாஸ்டர் படத்தின் போஸ்டர்கள் மற்றும் புரோமோ வீடியோக்கள் போன்றவை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற படத்தின் மீதான எதிர்பார்ப்பை இரட்டிப்பாக்கி உள்ளது. கடைசி நேரத்தில் எந்த குளறுபடியும் நடக்கூடாது என்பது மட்டுமே ரசிகர்களின் ஒரே வேண்டுதலாக உள்ளது.
அதேபோல் தளபதி விஜய்யுடன் கடந்த ஏழு வருடங்களாக படம் செய்ய முடியாமல் தடுமாறி வருபவர்தான் கௌதம் மேனன். 2013ஆம் ஆண்டு விஜய்க்கு யோகன் அத்தியாயம் ஒன்று என்ற ஸ்டைலிஸ் கேங்ஸ்டர் பட கதையை கூறியுள்ளார். ஆனால் அந்த படம் ஆரம்ப கட்டத்தை விட்டு நகரவே இல்லை.
போட்டோ ஷுட்டுடன் பொட்டியை கட்டிவிட்டார்கள். அதன் பிறகு கௌதம் மேனன் அஜித், விக்ரம், தனுஷ், சிம்பு என பல பேருடன் இணைந்து பணியாற்றி விட்டார். இருந்தாலும் தளபதி விஜய்யுடன் இணைந்து பணியாற்ற முடியவில்லையே என்ற சின்ன வருத்தம் அவருக்கு இன்னும் இருந்து கொண்டுதான் இருக்கிறது.
சமீபத்திய பேட்டியில்கூட எப்போது தளபதியுடன் படம் செய்வோம் என வெயிட் பண்ணி கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார். விஜய் மற்றும் கௌதம் மேனன் கூட்டணியில் உருவாகும் படம் நிச்சயம் ஸ்டைலிஸ் படமாக உருவாகும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.