திங்கட்கிழமை, ஜனவரி 6, 2025

கையில் சுத்தியலுடன் முரட்டுத்தனமாக வெளியான கேஜிஎப்2 டீஸர் போஸ்டர்.. தரமான செய்கை போல!

இந்திய சினிமாவே எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படம் கேஜிஎப் சாப்டர் 2. அனைவரும் கன்னட சினிமாவை ஏளனமாக பேசிக்கொண்டிருக்கும் நேரத்தில் அதிரடியாக உருவாகி இந்திய சினிமாவையே அதிர வைத்த திரைப்படம்தான் கே ஜி எஃப்.

காட்சிக்கு காட்சி அதிரடி கலந்து மிரட்டி இருந்தார் இயக்குனர் பிரசாந்த் நீல். அதுமட்டுமில்லாமல் கன்னட நடிகர் யாஷ்க்கு கேஜிஎஃப் படத்தின் மூலம் இந்திய அளவில் ஏகப்பட்ட ரசிகர் பட்டாளங்கள் உருவானது குறிப்பிடத்தக்கது.

கேஜிஎப் சாப்டர் 1 பட வெற்றியைத் தொடர்ந்து தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் தாறுமாறாக உருவாகி வருகிறது. மேலும் கே ஜி எஃப் 2 படத்தில் வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடித்துள்ளார். இந்நேரம் படத்தின் வெற்றியை கொண்டாடி இருக்க வேண்டியது.

ஆனால் சில பல சந்தர்ப்ப சூழ்நிலையால் படம் 2021 ஆம் ஆண்டு கோடை விடுமுறையை நோக்கி நகர்ந்துள்ளது. இதனால் ரசிகர்கள் கொஞ்சம் அப்செட் தான்.

இருந்தாலும் அவர்களை குஷிப்படுத்துவதற்காக எட்டாம் தேதி காலை 10:18 கே ஜி எஃப்2 படத்தின் டீசர் வெளியாக உள்ளது. இதனை மிரட்டலான போஸ்டர் மூலம் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

kgf-chapter2-teaser-poster
kgf-chapter2-teaser-poster

கே ஜி எஃப் படத்தில் நடித்த ஹீரோவான யாஷை விட இந்திய அளவில் பிரபலமானது அவர் கையில் வைத்திருந்த சுத்தியல் தான்.

Trending News