தமிழ் சினிமாவில் இருந்து சென்று அக்கட தேசத்தில் கலக்கி கொண்டிருக்கும் பிரபல நடிகை ஒருவரை தேடிச்செல்லும் இயக்குனர்களை பார்த்து, சம்பாதிக்க முடிவு பண்ணிட்டா இனி நீச்சலுடை போட பயப்படக் கூடாது என இயக்குனருக்கே அட்வைஸ் செய்து வருகிறாராம்.
வெளிநாட்டில் மாடலிங் செய்து கொண்டிருந்தவரை ஒரு இளம் இயக்குனர் ஒருவர் தன்னுடைய கூத்தடிக்கும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாக்கினார். முதல் படம் வெற்றி பெறவில்லை என்றாலும் இந்த நாயகியின் கதாபாத்திரம் இளம் ரசிகர்களை கவர்ந்தது.
அதனைத் தொடர்ந்து ஒரு சில படங்களில் மப்பும் மந்தாரமுமாக நடித்து வந்தார். நடித்த படங்கள் ஓடவில்லை என்றாலும் இந்த நடிகைக்கு மட்டும் வரவேற்பு குறையவே இல்லை. இளம் ரசிகர்களின் இந்த நடிகைக்கு டஸ்கி ப்யூடி என பெயர் வைத்துள்ளனர். தமிழில் பல படங்களில் நடித்தாலும் ராசியில்லாத நடிகை என பெயர் எடுத்த அந்த நடிகைக்கு அக்கட தேசத்தில் இருந்து அடித்தது ஒரு பம்பர் லாட்டரி.
முதல் படமே அக்கட தேச ஸ்டைலிஷ் நடிகருடன் தான். கடந்த வருட துவக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. அதிலும் குட்டி டவுசரை போட்டு கொண்டு தலுக்மொளுக்கென நடந்தது அக்கட தேச இளம் ரசிகர்களை அதிக அளவில் கவர்ந்து விட்டதாம்.
தற்போது அந்த நடிகைக்கு ஆர்மி ஆரம்பிக்கும் அளவுக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகரித்துவிட்டதாம். இதனால் படவாய்ப்புகளும் அதிகமாகிக்கொண்டே வருகின்றன.
இதனை பயன்படுத்தி நன்றாக கல்லா கட்ட முடிவு செய்துவிட்டாராம். இதனால் தன்னைத் தேடி வரும் இயக்குனர்கள் கிளாமர் பாத்திரங்களில் நடிக்கத் தயங்குவாரோ என நினைக்க கூடாது என்பதற்காகத் தானே முன்வந்து சம்பாதிக்க முடிவு பண்ணிட்டா டூ பீஸ் போட்டு நடிக்க சொன்னாலும் யோசிக்க கூடாது என இயக்குனர்களிடம் பஞ்ச் டயலாக் பேசி வருகிறாராம்.
இதனால் குஷியான இளம் நடிகர்கள் அந்த நடிகையை வைத்து 18+ படங்களையும் இயக்க முடிவு செய்துள்ளார்களாம். அதுமட்டுமில்லாமல் அக்கட தேச முன்னணி நடிகர்களின் பட வாய்ப்பும் குவிந்து வருவதாக தகவல். இனி விரைவில் அம்மணி பெரிய பங்களா வாங்கி செட்டிலானாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லையாம்.