செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

மாஸ்டரை ஓரம்கட்டிய கேஜிஎப்2 டீசர்.. சல்லி சல்லியா நொறுங்கிய யூடியூப் ரெக்கார்டுகள்

இதுவரை இந்திய அளவில் நாங்கள் தான் கெத்து என மார்தட்டிக் கொண்டிருக்கும் தளபதி ரசிகர்களை கப்சிப் என்று அமர வைத்துள்ளது கேஜிஎப் 2 பட டீசர். தற்போதைக்கு இந்திய சினிமாவில் உள்ள அனைத்து சாதனைகளும் கே ஜி எஃப் 2 படம் வசம்தான் உள்ளது.

ஒரு காலத்தில் கன்னட நடிகர்கள் என்றாலே கேலியாகவும் கிண்டலாகவும் தான் நினைத்துக் கொள்வார்கள். ஆனால் சமீப காலமாக அந்த பார்வை மாறி விட்டது என்றே சொல்லலாம். மாறிவிட்டது என்பதை விட மிரட்டி விட்டனர் என்பதுதான் சரியாக இருக்கும்.

அந்த அளவுக்கு காதல் படங்களில் இருந்து மாஸ் படங்கள் வரை பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பி வருகின்றன. அதுமட்டுமில்லாமல் மற்ற மொழி சினிமாவை ரீமேக் செய்து நடித்துக் கொண்டிருந்த கன்னட சினிமா, தற்போது மற்ற மொழி நடிகர்களை ரீமேக் செய்ய வைத்துள்ளது.

இதுவே ஒரு வெற்றிதான். அதற்கு முழுக்க முழுக்க காரணம் பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் உருவாகி இந்திய அளவில் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த கேஜிஎப் சாப்டர் ஒன் படம்தான். அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகியிருந்த கே ஜி எஃப் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

தற்போது கே ஜி எப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. இன்று யாஷ் பிறந்தநாளை முன்னிட்டு கேஜிஎப் 2 படத்தின் டீசர் வெளியிடயிருந்த நிலையில் திடீரென சில கயவர்களால் நேற்று இணையதளங்களில் லீக் செய்யப்பட்டது. இதனால் அவசர அவசரமாக இரவோடு இரவாக கே ஜி எஃப் 2 படத்தின் டீஸரை வெளியிட்டனர்.

ஆனாலும் சோடை போகவில்லை. இதுவரை இந்திய அளவில் 24 மணி நேரத்தில் அதிக லைக்குகள்(1.8M)பெற்றிருந்த மாஸ்டர் பட டீஸரை ஓரம் கட்டி விட்டது கே ஜி எஃப் 2 டீஸர்(2M).கேஜிஎப் 2 பட டீசரை பார்த்த நடிகர்கள் முதல் ரசிகர்கள் வரை இணையதளங்களில் நடிகர் யாஷை கொண்டாடி வருகின்றனர்.

kgf-chapter2-teaser-records
kgf-chapter2-teaser-records

இன்னும் டீசர் வெளியீட்டு 24 மணி நேரம் கூட முழுமையாக முடியவில்லை. ஆனால் அதற்குள் 60 மில்லியன் பார்வையாளர்களையும், 3.8 மில்லியன் லைக்குகளையும் குவித்துள்ளது.

Trending News