வியாழக்கிழமை, ஜனவரி 9, 2025

கே ஜி எஃப் 2 டீஸர் இந்த படங்களின் அட்ட காப்பியா.? அடப்பாவிகளா! ஆரம்பமே சொதப்பலா என கலாய்க்கும் ரசிகர்கள்

இந்திய திரையுலகில் தற்போது ஹாட் டாபிக் ஆக இருப்பது கே ஜி எஃப் படத்தின் இரண்டாம் பாகம் தான். இந்தப் படத்தின் டீசர் வெளியான 24 மணி நேரத்தில் 10 கோடி பார்வையாளர்களை பெற்று சாதனை புரிந்துள்ளது.

அதாவது கன்னட திரையுலகை வேற லெவலுக்கு மாற்றி காட்டிய படம்தான் கேஜிஎப் சாப்டர் ஒன். இதன் தாறுமாறான வெற்றிக்கு பிறகு கேஜிஎப் சாப்டர் 2 கன்னட நடிகரான யாஷ் மற்றும் சஞ்சய் தத் ஆகியோரின் கூட்டணியில், பிரசாந்த்  நீலின் இயக்கத்தில் பிரமாண்டமாக தயாராகி உள்ளது.

இந்த நிலையில் கே ஜி எஃப் 2 படத்தின் டீசரில் வெளியான பல முக்கிய காட்சிகள் வேறு படத்திலிருந்து காப்பியடித்து எடுக்கப்பட்டவை என்று நெட்டிசன்கள் ஆதாரத்துடன் கூறி வருகின்றனர்.

yash-kgf-cinemapettai
yash-kgf-cinemapettai

ஏனென்றால், இந்த டீசரில் ‘கைதி’ படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் நடிகர் கார்த்தி கையில் வைத்திருக்கும் மெஷின் கண் காட்சியையும், ரஜினி ‘எந்திரன்’ படத்தில் துப்பாக்கி சுடும் காட்சியையும், யாஷ் துப்பாக்கிக் குழாயில் சிகரெட் பற்ற வைக்கும் காட்சி ஒரு ஹாலிவுட் படத்தின் காப்பி என்றும், ஹீரோயின்கான காட்சி ‘பத்மாவதி’ படத்தில் தீபிகா படுகோனின் ஒரு காட்சியை ஒத்துள்ளது என்றும் கூறுகின்றனர் நெட்டிசன்கள்.

kaithi
kaithi

அதேபோல், தாய் மகன் சென்டிமென்ட் காட்சிகள் அனைத்தும் பாகுபலி,  அண்ணாச்சி, புதிய பாதை போன்ற படங்களின் காப்பி என்று சமூக வலைதள வாசிகள் தெரிவித்து வருகின்றனர்.

என்ன சொன்னாலும் ‘கேஜிஎப் 2’ படம் வெற்றி படமாவது என்னவோ உறுதி தான். அதற்கு ஆதாரம் இந்த படத்தின் டீசர்  பெற்றுள்ள சாதனை.

Trending News