வியாழக்கிழமை, ஜனவரி 9, 2025

விஜய்யின் கதை தேர்வு ஸ்டைல் இது தான்! ரகசியத்தை பகிர்ந்த லோகேஷ் கனகராஜ்

கோலிவுட்டே ஆவலாக எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த திரைப்படம் மாஸ்டர். தமிழ் சினிமா இண்டஸ்ட்ரியின் எதிர்கால தலையெழுத்தை நிர்ணயிக்கும் விதமாக மாஸ்டர் படம் பெரிய பொறுப்புடன் இன்று பொங்கலுக்கு களமிறங்கி உள்ளது.

மாஸ்டர் படம் எந்த அளவு ரசிகர்களிடம் வரவேற்பை பெறுகிறது அதுவும் தியேட்டரில் என்பதை காண மொத்த சினிமா நடிகர்களும் ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர். OTT தளங்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் ரசிகர்கள் தியேட்டரில் படம் பார்க்க விருப்பப்படுகிறார்கள் என்பதை நிரூபிக்கவே மாஸ்டர் படம் சில  நஷ்டத்தையும் பொருட்படுத்தாமல் தியேட்டரில் ரிலீஸ் ஆகிறது.

அதுமட்டுமில்லாமல் சமீபகாலமாக தளபதி விஜய் தனக்கு சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர்களை விட இளம் இயக்குனர்களுடன் சேர்ந்து பணியாற்றுவதில் ஆர்வம் காட்டி வருகிறார். அந்தவகையில் லோகேஷ் கனகராஜ் தொடர்ந்து அடுத்ததாக நெல்சன் என்ற இளம் இயக்குனருடன் களமிறங்கியுள்ளார்.

அதற்கு காரணம் என்ன என்பதை லோகேஷ் கனகராஜ் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார் . விஜய் பிரமாண்டமான கதைகளில் நடிப்பதை விட பிரமாதமான கதைகளை தேடி வருவதாக கூறியிருந்தார். மேலும் கதையின் கரு பிடித்து இருந்தால் உடனடியாக சிறிய இயக்குனர் என்று கூட பார்க்காமல் அதை முழு ஸ்கிரிப்ட் செய்யுங்கள் என இளம் இயக்குனர்களுக்கு அவர் கொடுக்கும் உற்சாகம்தான் தரமான படம் உருவாக காரணம் என சொல்லியுள்ளார்.

அதேபோல்தான் டாக்டர், கோலமாவு கோகிலா ஆகிய இரண்டு படங்களை மட்டுமே எடுத்துள்ள நெல்சன்க்கும் அப்படித்தான் வாய்ப்பு கொடுத்துள்ளாராம் தளபதி விஜய். இதனால் பிரம்மாண்ட இயக்குனர்களை தற்சமயம் விஜய் ஒதுக்கி வைத்து விட்டதாக தெரிகிறது.

lokesh-kanagaraj-cinemapettai
lokesh-kanagaraj-cinemapettai

இது அட்லிக்கு தான் பெரிய அழுத்தத்தை கொடுத்துள்ளதாம். அட்லீ பெரும்பாலும் படக்கதையை நம்பாமல் பிரம்மாண்டத்தை மட்டுமே நம்பி படம் எடுத்து வருகிறார். ஆனால் இளம் இயக்குனர்கள் பலரும் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து படம் எடுப்பதால் விஜய்யின் கவனம் தற்போது இளம் இயக்குனர்களின் மீது சென்றுள்ளதாம்.

Trending News