ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

பிரம்மாண்ட சீரியலை ஒதுக்கிய சன் டிவி.. கேப்பில் கிடா வெட்டிய ஜீ தமிழ்

சன் டிவியில் பிரமாண்ட சீரியலாக ஒளிபரப்பாகி வெற்றிபெற்ற சீரியலின் இரண்டாம் பாகத்தை ஒளிபரப்ப மாட்டேன் என சன் டிவி ஒதுங்கியதால் அந்த சீரியல் ஜீ தமிழ் டிவி தட்டி தூக்கி விட்டதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

நடிகர் சுந்தர் சி திரைப்படங்கள் மட்டும் அல்லாமல் சன் டிவியில் இதுவரை பல சீரியல்களை தயாரித்து ஒளிபரப்பி உள்ளார். அதில் பெரும்பாலும் நடிகை குஷ்பு தான் கதாநாயகியாக நடித்து வந்தார்.

ஆனால் கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஹிந்தி சீரியல்களுக்கு இணையாக பிரமாண்ட பட்ஜெட்டில் கிராபிக்ஸ் மற்றும் கிளாமர் ஆகியவை கலந்து சினிமா ரேஞ்சுக்கு ஒளிபரப்பாகி வந்த சீரியல்தான் நந்தினி. ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற நந்தினி சீரியல் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறதாம்.

கிட்டத்தட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட எபிசோடுகள் உருவாகி விட்டதாக தெரிகிறது. ஆனால் திடீரென சன் டிவி நிறுவனம் நந்தினி சீரியல் ஒளிபரப்பு ஆர்வம் காட்டவில்லையாம். சில பல காரணங்களால் அந்த சீரியலை ஒளிபரப்ப முடியாது என ஓபனாகவே தெரிவித்து விட்டார்களாம்.

zee tamil
zee tamil

இதனால் தனக்கு சாதகமாக இவ்வளவு நாள் இருந்து வந்த சன் டிவி நிறுவனம் ஏன் இப்படி செய்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியாமல் குஷ்பு மற்றும் சுந்தர் சி ஆகியோர் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சி இடம் நந்தினி சீரியல் வியாபாரத்தை மிகப்பெரிய தொகைக்கு பேசி முடித்து விட்டார்களாம்.

இவ்வளவு நாள் குஷ்பு மற்றும் சுந்தர் சிக்கு பக்கபலமாக இருந்து வந்த சன் டிவி நிறுவனம் திடீரென அவரை கழட்டி விட்டுள்ளது கோலிவுட் வட்டாரங்களில் புரியாத புதிராக இருக்கிறதாம்.

nandhini-serial
nandhini-serial
- Advertisement -

Trending News